Thursday, August 22, 2019

தோலுரிச்சிடலாம்.

பிஸ்கோத்து வாங்கித் திங்கிற அளவுக்குக் கூட மக்களிடையே வக்கில்லாமப் போச்சு என்பது போல பேசத் தொடங்கிட்டார்கள்.
ஜிஎஸ்டி போட்டதால் தான் விற்பனை குறைஞ்சு போச்சாம்ல பிரிட்டானியா பார்லே போன்ற நிறுவனங்களுக்கு? அப்படியா? இவனுக பித்தலாட்டப் பேச்சினைக் கொஞ்சம் தோலுரிச்சிடலாம்.
ஜிஎஸ்டி 18% சதவீதம் அதனால விற்பனை சரிவு.
அப்புறம் என்ன டேஷுக்கு 10 முதல் 25 சதவீதம் ஆஃபர் போட்டு விக்கிற? ( படத்தைப் பார்க்க) ஜிஎஸ்டியே கட்டமுடியாத கம்பெனி ஆஃபர் ஏன்ப்பா கொடுத்து சேல்ஸை ப்ரொமோட் பண்ற?
லாபத்தைக் குறைத்துக் கொண்டு ஆஃபர் கொடுக்கிறாங்கனு யாராவது கிளம்பி வருவார்கள். வர்றவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால், பிரிட்டானிய பிஸ்கட் கம்பெனியின் கடந்த ஐந்தாண்டின் லாப நஷ்ட புள்ளிவிபரம் இணைத்திருக்கிறேன் படிச்சுக்குங்க.

முதலில் ஒவ்வொரு வருடத்திற்கும் சேல்ஸ் குறைந்திருக்கா என்று பாருங்கள்.
அப்புறம் லாபம் எவ்வளவு கூடிட்டே இருக்குனு பாருங்கள்
மூன்றாவதாக, இவர்கள் கட்டிய வரியின் அளவு ஜிஎஸ்டி க்கு முன்/பின் பார்த்துக்குங்க... (ப்ளூ கலர் கட்டத்தில்)
லாபத்தில் எந்தக் குறையுமில்லை. வரி கட்டிய விகிதமும் பெருசா கூடவில்லை. அப்புறம் என்ன டேஷுக்கு கதறுறானுக? அப்ப ஏதோ திருட்டுத்தனம் பண்ண முடியல அப்படித்தானே?
இப்ப அடுத்த மேட்டருக்குப் போவோம்.
30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பாம். எப்படி?
அவனவன் வேலைக்கு ஆள் கிடைக்காம நாய் உச்சா போற மாதிரி எல்லா கரண்டு கம்பத்திலும் வேலைக்கு ஆட்கள் தேவைனு நோட்டிஸா அடிச்சுத் தள்ளிட்டிருக்கான். இவனுக மட்டும் ஆட்களை வேலையை விட்டு தூக்குறானுகளாமாம்.
அது வேற ஒன்னுமில்லை. இத்தனை நாளாக ஒரு யூனிட்டில் ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்தால், இவர்கள் 1,500 என்று கணக்குக் காட்டி வந்தார்கள். இரண்டாவது, இவர்களே எல்லா பிஸ்கட்களையும் தயாரிப்பதில்லை. அவுட்சோர்ஸிங்கில் இந்த ஃபார்முலாவில் இந்தனை வேண்டும்னு ஆர்டர் கொடுத்தும் நிறைய வாங்குவார்கள். ( பதஞ்சலியெல்லாம் 90% அவுட் சோர்ஸிங் தான்). அப்படி வாங்குவதிலும் இவர்கள் தயாரிப்பு அல்லது இவர்களின் யூனிட் என்பது போல தில்லாலங்கடி செலவு கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்து வந்தார்கள்.
இப்ப மோதி ஆட்சியில் அது முடியல. உண்மையை வெளியே சொல்ல முடியுமா? அதனால் ஆட்குறைப்பு என்ற நாடகம். காஸ்ட் கட்டிங் பண்ணும் உத்தியை பயன்படுத்தி செஞ்ச தப்பையும் சரி செஞ்சுக்கிறார்கள்.
எல்லாத்தையும் விட, தொழில் பங்குகள் பெரிய நிறுவனங்களிலிருந்து சிறிய நிறுவனங்களுக்கும் பரவத் தொடங்கியிருக்கு. அதனால் கார்ப்பொரேட்கள் கதறுகிறார்கள். லாபம் பரவுவது பொருளாதாரம் ஸ்திரமடைய மிகவும் உதவும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...