⛰ திருச்சியிலிருந்து ஏறத்தாழ 74கி.மீ தொலைவிலும், துறையூரிலிருந்து ஏறத்தாழ 29கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள பசுமையான இயற்கை எழில் கொண்ட இடம் தான் புளியஞ்சோலை மலை.
சிறப்புகள் :
⛰ புளியஞ்சோலை மலைக்கு செல்வதற்கு அடர்ந்த மலைப்பகுதியையும், இயற்கையாகவே அமைந்துள்ள பாறைகள் மற்றும் கற்களை கடந்து தான் செல்ல வேண்டும்.
⛰ புளியஞ்சோலை மலையை ஏழைகளின் குற்றலாம் என்றும் அழைக்கிறார்கள்.
⛰ இங்கு தனித்துவமான கோவில்கள், நினைவுச் சின்னங்கள், கட்டிடக்கலை போன்ற அம்சங்களை நாம் கண்டுகளிக்கலாம்.
⛰ இந்த மலையானது இயற்கை நிறைந்த பசுமையான காடுகளையும், எப்போதும் குளுமையாக இருக்கும் சூழ்நிலையில் அமைந்துள்ளது.

⛰ இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அருவிகள் அமைந்துள்ளன. நாம் தூரத்தில் இருந்து வரும்போது சல சல வென்று தண்ணீரின் சத்தம் நம் காதுகளுக்கு இனிமையாக இருக்கும்.
⛰ இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அருவிகள் அமைந்துள்ளன. நாம் தூரத்தில் இருந்து வரும்போது சல சல வென்று தண்ணீரின் சத்தம் நம் காதுகளுக்கு இனிமையாக இருக்கும்.
⛰ இந்த அருவிகளைப் பார்த்தால் நமக்கு கண்களுக்கு அழகாக காட்சியளிக்கும் மற்றும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ற எண்ணம் உருவாகும்.
⛰ சுற்றுலா வருபவர்கள் இளைப்பாறுவதற்கு என்று சில இடங்கள், குழந்தைகள் உற்சாகமாக விளையாடுவதற்கு ஊஞ்சல் மற்றும் பூங்காக்கள் என்று இப்பகுதியில் ஏராளமாக அமைந்துள்ளன.
⛰ புளியஞ்சோலை மலையிலிருந்து விழும் அருவி நீர் கொல்லிமலையில் இருந்து உருவாகிறது. இந்த நீர் மூலிகை கலந்து இருப்பதால் இதமாக குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்.
⛰ நம்முடைய உள்ளம் கொள்ளை போகும் அளவிற்கு புளியஞ்சோலை மலையின் இயற்கை காட்சியின் அழகுகளையும், இன்பத்தையும் அனுபவிக்கலாம்.
எப்படி செல்வது?
⛰ திருச்சி மற்றும் துறையூரிலிருந்து புளியஞ்சோலைக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது செல்வது?
⛰ அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
⛰ திருச்சியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment