Sunday, August 18, 2019

பெரியவா திருவடியே சரணம்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி . ராமசந்திரன் அவர்கள் பெரியவா ஆசியுடன் அமெரிக்கா சென்று, ஆபரேஷன் செய்துகொண்டு திரும்பியதும் ஒரு முறை காஞ்சி வந்து, பெரியவாளை தரிசனம் செய்தார். 'நான் மடத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். உத்தரவிடவேண்டும் ' என்று அடக்கமாக வேண்டிக்கொண்டார்.
சுவாமிகள், 'இங்கே வார தீர்த்தம் என்று ஸ்நானம் செய்ய குளங்கள் இருக்கின்றன . அவற்றைச் சுத்தப்படுத்தி எப்போதும் பராமரிக்க வேண்டும். அது போதும் ' என்றார்.
சோம வாரத்தில் ஏகாம்பரேசுவரர் குளம், செவ்வாய்க் கிழமைகளில் எதிரே இருக்கும் மங்கள தீர்த்தம்; புதன் கிழமை சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள காளிகா மேட்டில் இருக்கும் சத்ய வ்ரத தீர்த்தம், வியாழன் காயாரோகண தீர்த்தம், வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுக்ரவார தீர்த்தம், சனிக்கிழமை சர்வ தீர்த்தம் இப்படி ஜனங்கள் சென்று நீராடுவார்கள் . "எனக்கு எல்லாக் குளத்துக்கும் போக முடியாது; இந்த மடத்துக்கு எதிரில் உள்ள குளத்தை அதன் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் மங்கள வாரம் அந்த தீர்த்தத்தில் நான் நிம்மதியாக நீராடுவேன்" என்றார். அவ்வாறே செய்து கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதில் ஸ்னானம் செய்யப் போவது, திரும்புவது எல்லாமே மிகவும் கடினமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டுமாடி இறங்கி ஏறுவது போல் அவை அமைந்திருந்தன. அதிலும் கடும் வெயில் அல்லது மழைக்காலங்களில் சிரமமாக இருந்தது. . இப்படி உடலை வருத்திப் போய் ஸ்நானம் செய்ய வேண்டாமே என்று மடத்திலிருந்தவர்கள் தடுத்துப் பார்த்தார்கள். கேட்கவில்லை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவருக்கு பொறுக்கவில்லை. வெயிலின் கொடுமையால் தவித்துக் கொண்டே படியேறி வந்தவர் பெரியவா காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அழுதார்.
"பெரியவா பெருமைக்கும், வயதுக்கும் இப்படி சிரமப்பட்டு ஸ்நானம் செய்து விட்டு வருவது தேவையா? அவா மடத்திலேயே வேளா வேளைக்கு ஸ்நானம் பண்ணிண்டு சௌக்கியமா இருக்கணும். உடம்பை வருத்திக்கக் கூடாது. பெரியவாளுக்கு உடம்பு ;லட்சியமில்லாமல் இருக்கலாம். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். அனால், எங்களுக்கெல்லாம் பெரியவா ரொம்ப முக்கியம். இந்த சரீரத்துடன், ஆரோக்கியமாக நீண்ட நாள் இருக்கணும். பெரியவா இப்படியெல்லாம் பண்ணப்படாது" என்று பொழிந்து தள்ளினார். மேலும் " இப்படி நாள் பார்த்து அந்தந்த குளங்களில் குளிப்பது என்பதெல்லாம் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு; பெரியவாளுக்கு புதிதாக என்ன புண்ணியம் வர வேண்டும்? அவாளோ சாட்சாத் ஈஸ்வரன் ஆச்சே!" என்று கூறினார்.
பெரியவா அமைதியாக பக்கத்திலிருந்தவரிடம் , "அவரிடம் சொல்லு; இது மாதிரி தீர்த்த ஸ்நானம், பூஜை,ஜபம், தபம் ஒண்ணும் வேண்டாம் - எப்போ தெரியுமா? வேளா வேளைக்கு பசிக்கக் கூடாது, வீதியில் நடக்கும்போது காலில் ஏதும் குத்தினாலும் வலி தெரியக்கூடாது. நம்மை யாராவது வைதால் முகம் மட்டுமல்ல மனசு கூட வாடக் கூடாது. இப்படிப்பட்ட நிலை வந்து விட்டா, இந்த கர்மானுஷ்டங்கள் தேவையே இல்லை. எனக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை. வந்தால் விட்டுடறேன்" என்று பதில் சொன்னார்.
ஒன்று கவனிக்க வேண்டும் . வேளா வேளைக்கு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லவில்லை. வீம்பு பிடித்துக் கொண்டு சாப்பிடாமல் கூட இருந்துவிட முடியும். ஆனால், பசிக்கக் கூடாது என்கிறார். அது சாத்தியம் இல்லை. ஜிதேந்திரியனால் தான் அது முடியும்.
பெரியவா என்றைக்காவது பசிக்கிறது என்று சொல்லியிருக்காரா ? மடத்தில் கைங்கர்யம் பண்ணுபவர் அதிகமாகக் கஷ்டப்பட்ட சமாசாரமே பெரியவாளை பிட்சை பண்ண வைப்பதுதான். "சுவாமிகளே..சாப்பிட வாங்கோ, வாங்கோ .." என்று கதற வைப்பார் அவர்.
(இது நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த நிலைக்கு போகவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவோ?)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...