Tuesday, November 19, 2019

பொதுத்துறை வங்கிகளில் 6 மாதங்களில் ரூ.95,700 கோடி மோசடி.

கடந்த ஏப்., - செப்., வரையிலான 6 மாத காலத்தில், பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,700 கோடி அளவுக்கு மோசடி நடந்ததாக மத்திய அரசு, ராஜ்யசபாவில் தெரிவித்தது.

இதுகுறித்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: ரிசர்வ் வங்கி தகவலின் படி, கடந்த ஏப்., 1 முதல் செப்., 30ம் தேதி வரையிலான 6 மாத காலத்தில், 5,743 வங்கி மோசடிகள் நடந்துள்ளன. இந்த காலகட்டத்தில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.95,760.49 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது.




வங்கி மோசடிகளை தடுக்க விரிவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, செயல்பாட்டில் இல்லாத 3.38 லட்சம் நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
PSB,frauds,Rs 95700 crore,பொதுத்துறை வங்கி,மோசடி,Finance Minister, Nirmala Sitharaman, Rajya Sabha


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...