மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூபாய் 611 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
அதன்படி மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை கொண்டு எடப்பாடி, ஓமலூர் உட்பட நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
அதற்காக 611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்காக 611 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment