Friday, November 1, 2019

பிறந்தவர்களின் நலனைக்கூடக் கண்டுகொள்ளாமல் தன் நலனைப் பற்றிமட்டுமே சிந்திக்க வைத்துள்ளது.

இன்றைய செய்தி, கலெக்டர் சுஜித்தின் குடும்பத்துக்கு, பத்து லட்சம் வழங்கியிருக்கிறார்.அரசாங்கத்தின்சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மு. க.ஸ்டாலின் பத்துலட்சம், முதலமைச்சர் பத்துலட்சம் வழங்கியுள்ளனர். இந்த தொகை யாவும் அனுதாபத்தின் பேரில் வழங்கப்பட்டது.இதெல்லாம் சரி. முகநூலில் நண்பர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோர்தான் பாதுகாப்பு தரவேண்டும், இப்படி நிதி வழங்குவது தவறான முன்னுதாரணம் ஆகும், என்ற கண்டனங்களை பதிவு செய்தனர்.நான் இந்த நிதிவழங்கிய விஷயத்தை கொச்சை படுத்தாதிர்கள் என்று பதிவு செய்தேன். இப்போது கலெக்டர் நிதிவழங்கியபின் அரசாங்க வேலை வேண்டும் என்றுசுஜித்தின் குடும்பத்தினர் கேட்பது , நியாயமற்ற செயலாகும். அந்த குழந்தையின் இறப்பை வைத்து அரசாங்க வேலை கேட்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அரசு வேலை பார்த்த ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பம் நிர்க்கதியாகி விடகூடாது என்பதற்காக அந்தகுடும்பத்தைசார்ந்தவருக்கு வேலை கொடுப்பது வழக்கமான ஒன்று.எந்தஅடிப்படையில் , இப்படி கேட்கிறார்கள்? தனியார் கம்பெனிகளில் வேலை செய்யும் இளைஞர்கள்விபத்து போன்றவற்றில் இறந்து விட்டால், நிராதரவாக தவிக்கும் குடும்பங்களை, கண்கூடாக பார்க்கிறோம். அரசு இந்த அளவுக்கு செய்தும் மேற்கொண்டு இப்படிப்பட்ட சலுகைகளை எதிர்பார்ப்பதை பார்த்தால் அரசாங்கம் தவறு செய்துவிட்டதாக., மக்கள் எண்ணக்கூடிய சூழ்நிலை உருவாகி விடும்.ஆசைப்படுவதும், ஆதாயம் தேடுவதும், இந்த சந்தர்பத்தை வைத்து அரசியல் செய்வதும் சரியல்ல. தவறு ம் அலட்சியமும், பெற்றோர்களது தானே தவிர மற்றோரது அல்ல என்பதை புரிந்து கொள்வது நல்லது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...