Saturday, November 16, 2019

குருவாயூர்_நெய்_அரிசி_பாயாசம்.


இது குருவாயூர் குழந்தை கிருட்டிணனுக்கு நெய்வேதியம் செய்து அதற்கு பிறகு பக்தர்களுக்கு விடியற்காலையில் 5 மணியில் இருந்து காலை 6 மணிவரை மட்டுமே கிடைக்கும்.
இது அந்த கோயிலில் பணிசெய்யும் பணிக்கர்கள் மட்டுமே நோன்பு இருந்து இதை சமைப்பார்கள். அவர்கள் இதை துளியெனும் நாவில் வைக்காமல் பக்குவமாக சமைக்கபடுகிறது. ஒவ்வொரு துளியும் சுவை மிகுந்தது சுகாதாரமுடையது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
குருவாயூரப்பனின் பிராப்தம் நமது மனதில் நிறைவதை போல் தோன்றும்.
இதை சூடாக வாழைஇலையில் போட்டு அதில் ஒரு வாழைபழத்தை போட்டு அதில் கொஞ்சமாக நாட்டு சர்க்கரை சேர்த்து அதை அப்படியே பிசைந்து ஒரு குவளையை வாயிலில் வைத்தால் அதுதான் இந்திரன் சாப்பிடும் தேவாமிர்தமா என்ற ஐயம் தோன்றும் !!!!
தேவையான பொருட்கள்
சிவப்பு பச்சை அரிசி 1 கப்
கருப்பு வெல்லம் 2 கப்
சுக்கு தூள் 1 தேக்கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
ஏலக்காய் 3 ( பொடியாக பொடித்தது)
பசு நெய் 3/4 கப்
தண்ணீர் 4 கப்
முழு முந்திரி பருப்பு ஒரு கைப்பிடி
செய்முறை
1. சிவப்பு மட்டா அரிசியை நன்றாக 3 அல்லது நன்றாக கழுவி கொள்ள வேண்டும்.
2. இப்பொழுது பிரஷர் குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு அரிசியை சேர்த்துகோங்க நன்றாக 4 விசில் வரை விட்டுகோங்க.
3. நன்றாக வேக வைக்க வேண்டும் ஆனால் குழைந்து விடகூடாது.
4. இப்பொழுது ஒரு அகன்ற கெனமான பாத்திரத்துல கருப்பாக உள்ள வெல்லத்தை அரை கப் தண்ணீர்சேர்த்துகோங்க நன்றாக சிறுதீயிலேய கொதிக்க வைக்க வேண்டும் , வெல்லம் முழுவதுமாக கரைந்தவுடன் குப்பைகளை வடிக்கட்டவும்.
5. மறுபடியும் அடுப்புல வைத்து நன்றாக கருப்பு வெல்ல கரைசலை நன்றாக திக்காக வெல்ல கரைசலை காட்சியதும்.
6. பிரஷர் முழுவதுமாக அடங்கியதும் குக்கரின் மூடியை திறந்து அதில் வெல்ல கரைசலை ஊற்றி அதில் தேங்காய் துருவல் மற்றும் சுக்கு , ஏலக்காய் பொடி களுடன் பசுநெய்யை சிறிது சிறிதாக சேர்த்துகோங்க நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்...
🥗🥗🥗🥗🥗🥗🥗🥗🥗

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...