Wednesday, November 20, 2019

பெண்களுக்கு ஆரோக்கியம் தரும் #கல்யாணமுருங்கை தோசை செய்வது எப்படி?


கிராமப்புறங்களில், வேலி ஓரங்களில் வளரும் கல்யாண முருங்கைக்கு எண்ணற்ற மருத்துவக் குணங்கள் உண்டு.
இன்றும் கிராமங்களில் கல்யாண முருங்கையை முள்முருங்கை என்று சொல்வார்கள்.
அது பெண்களுக்கு உண்டான பிரச்சனைகளை சரிசெய்யக்கூடிய ஒரு அற்புதமான வல்லமை இந்த கீரைக்கு உண்டு.
கல்யாண முருங்கையை உணவில் சேர்தது கொண்டால் பெண்களுக்கு #மாதவிடாய்#கருப்பை சார்ந்த எந்தவித உடல் பிரச்னைகளும் வராது.
தற்போது கல்யாண முருங்கையில் எப்படி தோசை செய்யலாம் என பார்ப்போம்.
பச்சரிசி - 1 கப்
இட்லிஅரிசி - 1 கப்
கடலைபருப்பு - 4 ஸ்பூன்
கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
உப்பு - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 4
பெருங்காயம் - சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும்.
பச்சரிசி, இட்லி அரிசி, கடலைபருப்பு ஆகியவற்றை நன்றாக கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பின்னர் கிரைண்டரில் போட்டு நைசாக அரைக்கவும். பாதி அரைந்ததும் சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
அரைத்த மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். சத்தான கல்யாண முருங்கை தோசை ரெடி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...