Thursday, November 21, 2019

ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்பதன் பொருள்.

ஜோதிடம் என்கிற வார்த்தையின் பொருளே ஜோதி +திடம் என்பதாகும்.அதாவது ஒளியின் (சூரியன் பிற கிரகங்களுக்கு தரும் ஒளி) தன்மையை புரிந்து கொண்டு வாழ்க்கையை எதிர்கொள்ள மனதை திடப்படுத்த உதவும் கலை என்பதாகும்.அதனால் தான் ஆயகலைகளுள் ஒன்றாக ஜோதிடமும் இருக்கிறது.
ஆனால் அது காலப்போக்கில் மக்களை பயமுறுத்தும்,ஏமாற்றும் ஒரு பகடையாக சில தீய சக்திகளிடம் மாட்டி கொண்டது துரதிர்ஷ்டவசமானது.ஆயினும் உண்மையே வெல்லும் என்னும் வார்தைகளுக்கேற்ப ஜோதிட நூல்களில் உள்ள சில பழமொழிகளின் நுணுக்கங்களை தெரிந்து புரிந்து கொள்ள உங்களுக்கு உதவ நான் எடுக்கும் முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
மூலம் என்னும் வார்த்தையின் பொருள் அடிப்படை ஆகும்.அதனால் தான் இந்த நட்சத்திரத்தின் குறியீடு மரத்தின் அடிப்படையாகிய வேர் வைக்கப்பட்டுள்ளது.சந்திரன் ஒரு ராசியில் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட நட்சத்திர காலில் நிற்கும் போது ஜனனிக்கும் மனிதனுக்கு அது ஜென்ம நட்சத்திரம் என்று விதிக்கப்படுகிறது.
தனுசு ராசியில் உள்ள மூல நட்சத்திரத்தில் சந்திரன் இருக்கும் போது அது பௌர்ணமி சந்திரனாக திகழ எதிரே உள்ள மிதுனத்தில் சூரியன் சமசப்தமாக இருக்க வேண்டும். அப்படி சூரியன் மிதுனத்தில் இருக்க வேண்டும் என்றால் அது ஆனி மாதமாக மட்டுமே இருக்க முடியும். அந்த தருணத்தில் செய்யும் சுப காரியங்கள் அரச பலன்களை தரும்.அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளும் அரச வாழ்க்கை வாழ வாய்ப்புகள் அதிகம்(சந்திரனை பங்கம் பெறாத குரு பார்த்திருந்தால்).
அதேபோல் புரட்டாசியில் சூரியன் கன்னி ராசியில் இருப்பார்.சந்திரன் அந்த மாதத்தில் மூல நட்சத்திரத்தில் இருக்கும் போது அன்றைய தினம் அஷ்டமி திதியில் வரும்.அஷ்டமி திதியில் நற்காரியங்கள் செய்யக்கூடாது என்பதை நாம் ஹிந்து மதத்தில் பின்பற்றி வருகிறோம்.அன்று பெரும்பாலும் நற்காரியங்கள் செய்யப்படுவதில்லை.
எனவே இப்பொழுது புரிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
"ஆனி மூலம் அரசாளும் கன்னி மூலம் நிர்மூலம்". இங்கே கன்னி என்பது கன்னி ராசியை குறிக்கிறதே ஒழிய கன்னி பெண்களை அல்ல.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்னும் வள்ளுவர் வாக்கிற்கு ஏற்ப சரியாக உணர்ந்து புரிந்து கொள்ளுதல் அவசியம்.
சரி அப்படி அரசாண்ட ஆண் மூலம் யாராவது உள்ளார்களா?? இருக்கிறார்.. ராமாயணத்தில்... அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயனா?? இல்லை மண்டோதரியின் மணாளன் ராவணன்..அவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர் தான்...
......நன்றி.........

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...