- ரூ. 25 லட்சம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் நிர்வாக இயக்குநர் ஒருவரை சிபிஐ கைது செய்துள்ளது.
- நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் வருமான வரி மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான இடங்களில் மற்றும் வீடுகளில் சிபிஐ சோதனைநடத்தி வருகிறது.
- குறிப்பாக தில்லி, நொய்டா மற்றும் லூதியானா ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்று வந்தன.
- இந்த சோதனைகளின் முடிவில் லூதியானாவில் வருவாய் புலனாய்வுத் துறை கூடுதல் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவரும், அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்கள்.
- நிர்வாக இயக்குநர் சந்திரசேகருக்காக ரூ. 25 லஞ்சத்தை பெற முயன்ற சமயம் அந்த இடைத்தரகர் கைது செய்யப்பட்டார்.
- விசாரணையின் போது அவர் அதை ஒப்புக் கொண்டதன் காரணமாக தற்போது சந்திரசேகரும்கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபரங்கள் வருவாய் புலனாய்வுத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment