Thursday, January 2, 2020

*சைவர்களாகிய நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள்*

**திருச்சிற்றம்பலம்**
தமிழும் சைவசமயமும் சைவநெறியும் தழைத்தோங்க சிவவழிபாடு பின்பற்றுவோம்..
*சைவர்களாகிய நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள்*
1. நம் பெயருக்கு முன் *'சிவ'* என எழுதுதல். பிறருக்கு கடிதம்
எழுதினால் *'சிவ*' என்று பெயருக்கு முன் எழுதுதல்.
2. பிறரைக் கூப்பிடும் போது *'சிவா'* எனப் பெயருடன் சேர்த்துக் கூப்பிட வேண்டும். உதாரணமாக, கந்தசாமியை, கந்தசாமி சிவா எனக்
கூப்பிடுதல்.
🔆'சிவ சிவ' என்றிடத் தீவினை மாளும் என்பது மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த திருமூலநாயனார் திருவாக்கு ஆகும்.
3. நம் வீடுகளில் மனைவி மக்களை சேர்த்து 'சிவாயநம' என்னும்
திருஐந்தெழுத்தினையும், திருமுறை பதிகங்களை கூட்டாகச் சொல்லலாம்.
இந்தக் கூட்டு வழிபாட்டினால் நல்ல ஒலி அலைகள் நம் வீடுகளில் பரவும்.
4. வீட்டின் வெளியிலும், உள்ளேயும் திருமுறை வாசகங்கள் எழுதி
வைக்க வேண்டும்.
(உ.ம்) *அண்ணாமலை எம் அண்ணா போற்றி!*
*கண்ணார் அமுதக் கடலே போற்றி!*
5. திருமணம், அறுபது நிறைவு, காதணி விழா, நீத்தார் சடங்கு, போன்ற
நம்வீட்டுச் சடங்குகள் அனைத்தையும் தமிழ்வேதப் பாடல்களைக்
கொண்டு செய்தல் நலம். (தீந்தமிழ் முறையில் செய்தல்)
6. 'ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொழுது, *'சிவாய நம'* என்று *'சிவ சிவ'*
*'திருச்சிற்றம்பலம்'* போன்றவற்றைச் சொல்லும் பழக்கத்தை
மேற்கொள்ள வேண்டும்.
7. தொலைபேசியில் அழைப்பு வந்த உடன் *சிவாயநம*, *சிவசிவ* *திருச்சிற்றம்பலம்* என்று
- இறைவருடைய திருநாமத்தை சொல்ல வேண்டும்.
8. பரிசளிக்க நேர்ந்தவிடத்துத் திருமுறை நூல்களையே பரிசளிக்கப் பழக வேண்டும்.
9. திருநெறிய தமிழ் வேதப் பதிகங்களை இல்லங்கள் தோறும் பலர் சேர்ந்து பாராயணம் செய்ய வேண்டும்.
**ஈசன் அடி தேடி பின்பற்றி**
ஆலவாயர் அருட்பணி மன்றம். மதுரை...
மாதம் ஒருமுறை பழமையான சிவனார் ஆலயத்தில் மூலிகை அபிடேக பெருந்திருவிழா நடைபெறுகிறது...
மாதம் ஒருமுறை
மூலிகை அபிடேகமும்
உழவாரப்பணியும் சிவவேள்வியும்
திருக்கைலாய வாத்தியமும்
மண்ணுக்கேத்த மரக்கன்றுகள் விழாவும் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இதுவரை 377 ஆலயங்கள் மாத வழிபாடு நிறைவு பெற்றுள்ளன
திருச்சிற்றம்பலம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...