எந்த ஒரு பெரிய நோய்களும் குணம் ஆகுவதற்கு மனம் முழுதாக ஒத்துழைக்க வேண்டும்,
எனக்கு விரைவில் குணமாகி விடும் என்கிற நம்பிக்கை நோய் பற்றி மிகுதியாக சிந்திக்காமல் இருப்பதன் மூலம்,
மனம் இலகுவாக இருப்பதால் இதய இரத்த ஒட்டம் சீராக இருக்கும்,
அதன் வழியாக நோய்கள் விரைவில் குணமடையும்.
வலி என்பது நோயின் பக்க விளைவு என்பதை விட,வலி என்பது நோய் இருப்பதை மூளைக்கு உணர்த்தும் ஒரு இயற்கை ஏற்பாடு என்பதாகப் புரிந்து கொண்டால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியும்.
வலி என்பது நோயின் பக்க விளைவு என்பதை விட,வலி என்பது நோய் இருப்பதை மூளைக்கு உணர்த்தும் ஒரு இயற்கை ஏற்பாடு என்பதாகப் புரிந்து கொண்டால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியும்.
வலி மட்டும் இல்லை என்றால் நோய் கண்டதே நம்மால் உணர முடியாது, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் குறைந்து விடும்.
உடல் சிதைவுக்கு இட்டுச் சென்று விடும். நோய் கண்ட உடலுக்கு வலிகள் மிக மிகத் தேவையான ஒன்று.
காற்றில் மாசுக்கள் சேரும் போது, தண்ணீரில் அசுத்தம் சேரும் போது அவை தூய்மைக் கேடு அடைவதைப் போன்றது தான் உடலில் ஏற்படும் நோய்கள்.
இவற்றிற்கான தற்காலிக அல்லது முடிவான தீர்வு என்பது சரியான மருத்துவரைப் பார்த்து அல்லது சரியான மருந்து பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது மட்டுமே.
ஆனால் நோய்களை சில போலிச் சாமியார்கள் குணப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள்.
அவர்களை நம்ப வைக்கிறார்கள்..
அவர்களை நம்ப வைக்கிறார்கள்..
முடவர்களை நடக்க வைப்போம், ஊமைகளைப் பேச வைப்போம் என்கிற ஒரு பிரிவினரைப் போல்,
சில மத சாமியார்களில் பலர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பலரையும் குணப்படுத்துகிறார்கள் என்று பொய்களைப் பரப்பி வருகின்றார்கள். ,
மிகச் சிறந்த ஆன்மீகவாதிகள் என்று போற்றப்படுபவர்கள் கூட தீர்க்க முடியாத நோய் கண்டே இறந்து இருக்கிறார்கள்,
இராமகிருஷ்ண பரம ஹம்சருக்கு புற்றுநோய், அவர் முதியவர் என்றாலும் இறக்கும் போது மிகவும் தள்ளாடக் கூடிய முதியவர் அல்ல,
விவேகானந்தர் இறக்கும் போது அவருக்கு வயது 40க்கும் கீழ் தான். அவருக்கும் இரத்தப் புற்றுநோய், மூல நோய் ஆகியவை இருந்தன.
கிருபானந்தவாரியார் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
மகான் எனச் சொல்லப்பட்ட புத்தரும் விஷ உணவை உண்டதனால் ஏற்பட்ட விஷம் பரவலின் மூலம் உயிர் துறந்தார்.
இப்படியாக எந்த ஒரு சாமியார்களும், ஆன்மீகவாதிகளும் கடுமையான நோய் இல்லாமல் இறந்ததோ அல்லது வாழ்நாள் முழுவதும் நோய் அண்டாது வாழ்ந்தோ அல்லது மரணம் என்பதை முற்றிலும் தவிர்த்தவர்களாக இருந்ததே கிடையாது..
மனித உடல் உலோகங்களால் ஆனது கிடையாது, நோய் முற்றினால் மரணம் இயற்கை ஆனது,இதில் யாரும் விதிவிலக்கு கிடையாது..
மருந்துகள் மூலம் நோய்களைக் கட்டுப்படுத்தலாம், குணப்படுத்தலாம், மரணத்தையும் தவிர்க்கலாம்,
ஆனால் இதில் எதையுமே இந்த போலி சாமியார்களின் மீது இருக்கும் நம்பிக்கையால், அவர்களின் ஆசிர்வாதங்களினால் நோய்கள் குணம் அடைவதில்லை என்பதை உணருங்கள்..
No comments:
Post a Comment