Tuesday, January 14, 2020

கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு என்பதில்..கோவில் என்கிற கட்டிட அமைப்பின் பங்கு மிக பெரியது.

கோபுர தரிசனத்தோடு உள்ளே கால் வைக்கும் நிமிடம் முதல்..கோவிலின் அங்குலம் அங்குலமாக நிரம்பி இருக்கும் அதன் வடிவ அமைப்பில் லயித்து..விசாலமான பிரகாரங்களில் ஒவ்வொரு சந்நிதியாக நின்று நிதானித்து ..சன்னதி அல்லாத பிற மண்டபங்கள் , கல் தூண்களில் கம்பீரமாக காட்சியளிக்கும் தெய்வங்கள் , கலைவெளிப்பாடுகள் அனைத்தையும் உள்வாங்கி கவனித்து ..இறுதியாக ...விசாலமான பிரகாரத்தில் வீசும் காற்றில் மனம் லயித்து அமரும்வரை ...ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானவை. உளவியல் ரீதியாக ..கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடு என்பதை முழுமை பெறச் செய்பவை.

மார்கழி அதிகாலை தரிசனத்திற்காக ...நேற்று சனிக்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றிருந்தேன்.
கோவிலை நெருங்கும் வழி எங்கும் குப்பையோ குப்பை. நெருக்கடி மிகுந்த பகுதி என்று காரணம் சொன்னால் அது அபத்தம்.
கோவிலில்..வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு ...பக்தர்கள் வரிசைக்காக சீனப் பெருஞ்சுவர் போல வளைந்து வளைந்து செல்லும் தடுப்புகள். பக்கவாட்டு வழியில் உள்ளே செல்லுமாறு ஏற்பாடு.
பலரும் நெருக்கியடித்துக் கொண்டு செல்லும் வகையில் மிகக் குறுகிய வழி. இயந்திரத்தனமாக நகர்ந்து ...இயந்திரத்தனமாக தரிசித்து ..நகரும் நிலை.
கோவிலின் பழைய உண்மையான அமைப்பு மறைந்து போய் ..சகட்டுமேனிக்கு கிரில் கம்பி அடைப்புகளும், கான்கிரீட் மேல் பூச்சுகளுமாக ...மனம் லயிக்கவில்லை.
Maze-க்குள் நுழைந்து வெளிவருவதை போன்ற உணர்வு !
மிகவும் பிரபலமான அனைத்து கோவில்களும் இப்படியான நிலையை அடைந்துவிட்டிருப்பதும் & அடைந்து கொண்டிருப்பதும் பெரும் சோகம்.
இதில் ...மிக விசாலமான இடம் கொண்டது என்பதால்..'உள் சிதைவுகள்' பார்வையில் அறையாமல்.. கபாலீசுவரர் கோவில் மட்டும் தாக்குப் பிடிக்கிறது போலும்.
கோவில்களை அதற்குரிய தனித்துவ சிறப்பு குலையாமல் மிகச் சிறப்பாக பராமரிப்பதிலும், பெரும் பக்தர்கள் கூட்டத்தை கூட..அவர்களுக்கு எந்த வித சிரமுமின்றி... மிகச்சிறப்பான திட்டமிடுதலோடு முறைப்படுத்துவதிலும்... கர்நாடகா கோவில் பொறுப்பாளர்களுக்கு...[குறிப்பாக தக்ஷிண கன்னட பகுதி ] விருதே கொடுக்கலாம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...