"என்னுடைய நுரையீரல்கள் சரியாக இல்லாது, அதன் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள் சூழ்ந்து கொண்டன. நுரையீரல்கள்
முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை. வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல
வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல் அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை பழி வாங்கியது.
முழுவதுமான திறனோடு வேலை செய்யவில்லை. வயதான காரணத்தால், நுரையீரல்கள் மெல்ல மெல்ல
வேலை செய்யும் திறனை இழக்க, இந்த நுரையீரல் அடைப்பும் சேர்ந்து கொண்டு என்னை பழி வாங்கியது.
மூச்சுத் திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு நான் அவஸ்தைப்படும்படி ஆயிற்று. முகம் முழுவதும் மூடி, ஆக்ஸிஜனை வேகமாக செலுத்தினால் தான்
நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது. என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு
தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.
நான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை ஏற்பட்டது. என்.ஐ.வி.என்கிற அந்த விஷயத்தோடு தான் இரவு
தூங்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.
ப்ராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து – அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள்.
இதை வேறு எப்படி சரி செய்வது ? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். ஆனால், ஒரு பிடி
மூச்சு பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவது என்பது கடினமாக இருந்தால் என்ன செய்வது – எப்படிச் சமாளிப்பது.
தினசரி மரண போராட்டமாக
அது மாறி விட்டது. மூச்சு வேக வேகமாக இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான்.
என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

பத்தொன்பது வயதிலிருந்து குடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மைலாப்பூர் பூராவும் சுற்றித்திரிந்த எனக்கு சிறை தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய
வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது.
உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது.
வலி இல்லை. ஜூரம் இல்லை. ஆனால், அந்த ஆக்ஸிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்க முடியாது. பேச முடியாது.
உணவு உண்ண முடியாது. எதுவுமே செய்ய முடியாது.
இது காலில் சங்கிலி கட்டி கையில் பெரிய இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை.
மரணம் எல்லாருக்கும் வரும். எந்த ரூபத்தில்
வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி இதோ.. இதோ .. என்று பயம் காட்டுகின்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சுத் திணறி இதோ.. இதோ .. என்று பயம் காட்டுகின்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது.
உள்ளுக்குள் போன மூச்சை வெளியே விட முடியாமல், வெளியே இருக்கின்ற பிராணவாயுவை உள்ளே இழுக்க
முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும் வரக்கூடாது.
முடியாமல், திணறி கதறுகின்ற ஒரு வேதனை யாருக்கும் வரக்கூடாது.
#சிகரெட் இன்று உங்களை ஒன்றும் செய்யாது. பிற்பாடு ஒரு நாள் மிக நிதானமாக #கொல்லுகின்ற ஒரு
#விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
#விஷம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள்.
நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு – சிகரெட் ஆசை வராது"...
நன்கு பிராணாயாமம் கற்றுக் கொண்டவர்களுக்கு – சிகரெட் ஆசை வராது"...
No comments:
Post a Comment