தமிழுக்கு தொண்டாற்றிய நக்கீரன் பெயரை வைத்துக் கொண்டு , தமிழ்நாடு மாநிலம், தமிழ் மக்கள் தலை குனியும் படி சில மாதங்களுக்கு முன் நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் என்று கூறிக்கொண்டு வேசி போன்ற வியாபாரம் செய்யும் கோபாலன் அவர்கள் ஆளுநரைப் பற்றி கிசு கிசு பேசி, தனது தரத்தையும், தமிழ்நாடு ஊடகத்தின் கீழான தரத்தையும் மக்கள் சிரிக்கும் படி செய்தது உலகம் அறிந்ததே.
தார்மீகம் இல்லா பத்திரிக்கை, மானம் இல்லாத பிழைப்பு, பணத்திற்காக விலை போகும் கீழ்த்தரம், இவைகளின் மொத்த உருவம் நக்கிப் பிழைக்கும் கோபால் என்றால் மிகையாகாது. இது தரமான வார்த்தை இல்லை என்றாலும், தரமற்ற வாழ்வு வாழும் கோபாலின் கீழ்த்தனத்தை வேறு ஒரு வார்த்தைகள் மூலம் விவரிக்க முடியாது.
யாருக்குமே தெரியாமல், ஊடகங்கள் வாயைத்திறக்காமல் , கோபால் தனது தவறுக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார். கோபால் வருத்தம் தெரிவிக்க உதவியவர் தி ஹிந்துவின் என். ராம் அவர்கள். ராம் அவர்களின் தரம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்று காட்டுகிறது. நாட்டின் ஒரு தரம் வாய்ந்த நாளிதளின் ஆசிரியராய் இருந்து விட்டு, அதன் தரத்தை கீழ் மட்டத்திற்கு கொண்டு விட்டு, இப்பொழுது கோபால் போன்ற தரம் தாழ்ந்து, மனிதர்கள் என்று சொல்லித் திரியும் மனிதர்களுடன் தோளுடன் உரசி செல்லும் ராம் அவர்களைப் பார்த்தால், மனிதர்கள், எவ்வளவு கீழ்த் தரமாக செல்லமுடியும் என்று உணர முடிகிறது.
No comments:
Post a Comment