தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 13 மாவட்டங்களில் திமுகவும் இன்னொரு 13 மாவட்டங்களில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது மீதியுள்ள 1 இடம் இழுபறி நிலையில் உள்ளது. (திமுக, அதிமுக இரண்டு கட்சியும் சம அளவு சீட்கள் வென்றுள்ளது 3 இடங்களை சுயேச்சை கைப்பற்றியுள்ளது இந்த மூன்று பேர் எந்த பக்கம் சாய்வார்கள் என்பதை பொறுத்து அந்தமாவட்டதில் ஊராட்சி தலைவர் யார் என்பது முடிவாகும்)
ஆக இரண்டு பெரிய கட்சிகளும் சம அளவு வென்றுள்ள ஒரு தேர்தல் இது. 2006, 2011 உள்ளாட்சி தேர்தல் உடன் இதை ஒப்பிடுவது தவறு. 2006, 2011 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற தேர்தல் நடந்த உடனே நடந்தது அதனால் அது ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தது ஆனால் இப்பொழுதைய உள்ளாட்சி தேர்தல் என்பது சட்டமன்ற தேர்தலுக்கு முன்னால் நடந்துள்ளது அது போக ஆளும் அதிமுக கட்சி கடந்த 9 ஆண்டுகளாக பதவியில் உள்ளதால் மக்களுக்கு அதன் மேல் இயல்பாகவே ஒரு எதிர்ப்பு மனப்பான்மை இருக்கதான் செய்யும் ஆனால் அதையும் மீறி அதிமுக 50 சதவீத இடங்களை வென்றுள்ளது பாராட்டத்தக்கதாகும். உண்மை என்பது இப்படி இருக்க திமுக அதிமுகவை விட எண்ணிக்கையில் சில சீட்கள் கூட பெற்றுள்ளதை வைத்து திமுக மாபெரும் வெற்றி என்று திமுக ஆதரவு மீடியாக்கள் கொண்டாடுவது முட்டாள் தனமானது.
இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் மீதமுள்ள 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடித்துவிட்டால் அதன் பிறகு அதிமுக 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வசதியாக இருக்கும் ஆனால் திமுக வழக்கம் போல் கோர்ட்க்கு சென்று அதை செய்ய விடாமல் தடுத்து கொண்டிருக்கும் போல் தான் தெரிகிறது.
No comments:
Post a Comment