கருணாநிதி இல்லாத தி.மு.க. ஒரு சராசரி கழகக் கண்மணி அளவுக்குக் கூட சரளமாகப் பேச வராத ஒரு நபரை கருணாநிதி மகன் என்ற ஒரே காரணத்துக்காக சகித்த தி.மு.க.வினர். அவர்கள் பெற்ற வெற்றி பெரியதுதானே.
இதே போல பா.ஜ.க.வில் ஒரு அசட்டுத் தலைவர் இருந்தால் பா.ஜ.க. ஆதரவாளர்களே கடித்துக் குதறியிருக்க மாட்டார்கள்?
நெல்லை கண்ணன் விவகாரத்தில் கூட நெல்லை கண்ணனை கண்டித்தவர்களை விட அதற்கு ஆதரவளித்த முஸ்லீம்களைக் கண்டித்ததை விட உடனடியாகக் கைது செய்யாத தமிழக அரசைக் கண்டித்ததை விட பா.ஜ.க.வைக் கண்டித்த பா.ஜ.க. முக நூல் ஆதரவாளர்கள்தான் அதிகம். Party with difference என்றால் இவர்கள் Supporters with difference. பா.ஜ.க.வுக்கு தனி எதிர்க்கட்சியே தேவையில்லை.
திராவிட பா.ஜ.க. என்று சிலர் சொல்லும் போது கோபம் வருகிறது. திராவிடக் கட்சிகளைக் கடைப்பிடிப்பதாலல்ல. அவர்களிடமிருந்து எதுவுமே கற்றுக் கொள்ளாததால்.
No comments:
Post a Comment