Wednesday, January 15, 2020

" மஹாளய அமாவாசை "

முன்னோர்கள் வழிபாடு:- திதி, தர்ப்பணம், சிரார்த்தம் செய்ய உகந்த நாட்களாக நம் சனாதன தர்ம முன்னோர்கள் நான்கு நாட்களை முக்கியமாக தெரிவித்து உள்ளனர்
1.ஆடி அமாவாசை, 2.தை அமாவாசை 3.மஹாளய அமாவாசை 4.இறந்த நாள் அன்று வரும் திதி இந்த நான்கு நாட்களும் நாம் அவசியம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்
ஏன் இந்த நான்கு நாட்களை முக்கியமாக மிக அவசியமாக வைத்தனர்.? வீட்டில் இருக்கும் பெற்ற தாய் தகப்பனை விரட்டி விட்டு அவர்களுக்கு உணவு அளிக்காமல் அனாதை ஆசிரமத்திற்கும் முதியோர் இல்லத்திற்கும் உணவு அளித்து என்ன பயன்.? அது போல நம் முன்னோர்களை வழிபடாமல் அவர்களுக்கு செய்ய வேண்டிய ஆன்மீக வழிபாட்டு கடமைகளை செய்யாமல் மற்ற தெய்வங்களுக்கு பூஜைகள் செய்வது பரிகாரம் செய்வது வழிபாடு செய்வது இதனால் என்ன பயன் ஏற்பட போகிறது.?

அதற்கு முன் உத்ராயணம் தட்சிணாயணம் என்றால் என்ன என்று பார்ப்போம்
1. உத்தராயனம் 2. தட்சிணாயனம் ஆகும்.
1. உத்தராயனம்
உத்தர் என்றால் வடமொழியில் வடக்கு என்று பொருள். சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயனம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மற்றும் ஆனி ஆகிய ஆறு மாதங்கள், உத்தராயன காலமாகும். நம்முடைய இந்த ஆறு மாத காலமானது தேவர்களுக்கு ஒரு பகல் பொழுதாகும்.
2. தட்சிணாயனம்
தட்சண் என்றால் வடமொழியில் தெற்கு என்று பொருள். சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமே தட்சிணாயன காலமாகும். ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்கள் தட்சிணாயன காலமாகும். ஆடி மாதம் 1ஆம் தேதியன்று தட்சிணாயனம் ஆரம்பமாகும். தட்சிணாயன காலமான ஆறுமாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகும். மார்கழி மாதமே தேவர்கள் விழித்தெழும் காலமாகும். அதன் காரணமாகத்தான் அந்த மாதம் முழுவதும் மக்கள் கோயில்களில் பஜனை பாடி தேவர்களை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள்.
உத்தராயனமும் தட்சிணாயனமும் சேர்ந்த நம்முடைய ஓராண்டானது தேவர்களுக்கு ஒரு நாளாகும். தை மாதமானது மகர ராசிக்குரிய மாதமாகும். சூரிய பகவான் உத்தராயன காலம் ஆரம்பிக்கும் நாளான தை 1ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைகிறார். எனவே உத்தராயன கால ஆரம்பம் மகர சங்கராந்தி என்று அழைக்கப்படுகிறது.
எனவே இந்த காலங்களில் வரும் அமாவாசைகளில் நம் முன்னோர்கள் இறைவனை வழிபட அனுமதிக்கபடுவர் அப்போது நம் வேண்டுதல்கள் அனைத்தும் நம் முன்னோர்கள் வழிபாட்டு வழியாக நேரடியாக இறைவனை அடையும் மேலும் மஹாளய அமாவாசை என்றால் என்ன என்றும் பார்ப்போம்
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு பூமியில் புனித நதிகளில் நீராடி இறைவனை வழிபட வருவர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க
வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நமக்காக இறைவனிடம் வேண்டுவர் நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை மற்றும் ஆடிஅமாவாசை, தை அமாவாசை இவற்றை அவசியம் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...