வெறும் கைலியும் அரக்கை சட்டையும் நீளமான தாடியுடனும் மனிதர்கள் இருந்தார்கள்..
வட்டியை விபச்சாரத்தை மதுவை வெறுத்தவர்களாக...
பணமிருந்தும் ஆடம்பரத்தை விரும்பாதவர்களாக...
இறைவனுக்கு பயந்து சுய ஒழுக்கத்தை பேணியவர்களாக..
வார்த்தைகளில் கண்ணியத்தை பேணியவர்களாக...
தங்களது மத கொள்கைகளை பிறர் மீது திணிக்க முயலாதவர்களாக...

அத்தனை மாற்றுமத சகோதரர்களும் பாய் என்று அழைத்து அவர்களை கண்ணியமான இடத்தில் வைத்திருந்தார்கள்..
தொப்பிவைத்து தாடி வைத்து ஒரு இஸ்லாமியர் என்றால் அவரை நம்பி மாற்றுமத சகோதரர்கள் தங்களது குடும்பத்தையே ஒப்படைத்துச் சென்றார்கள்..
தொப்பிவைத்து தாடி வைத்து ஒரு இஸ்லாமியர் என்றால் அவரை நம்பி மாற்றுமத சகோதரர்கள் தங்களது குடும்பத்தையே ஒப்படைத்துச் சென்றார்கள்..
அதற்காக அவர்கள் தங்களது இஸ்லாமிய நெறியை விட்டுக் கொடுத்ததும் இல்லை..
தங்களுக்கு போதிக்கப்பட்ட ஒழுக்கத்தை சிறப்பாக பேணினார்கள்..
தங்களுக்கு போதிக்கப்பட்ட ஒழுக்கத்தை சிறப்பாக பேணினார்கள்..
இடையில் ஒரு சமூகம் உருவாகியது பாலைவன மணலில் பணம் சம்பாரிக்க போனவர்கள் அங்கிருந்து டிவியையும் டெக்கையும் அத்தோடு அரேபிய கலாச்சாரத்தையும் தூக்கி கொண்டு வந்தார்கள்..
ஆடம்பரத்தை விரும்ப ஆரம்பித்து அதை தனது அடுத்த தலைமுறைக்கும் போதித்தார்கள்..
இஸ்லாம் போதித்த எளிமையை மறந்து பகட்டை வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள்..
இஸ்லாம் போதித்த எளிமையை மறந்து பகட்டை வெளிக்காட்ட ஆரம்பித்தார்கள்..
அரேபியர்களின் கலாச்சாரத்தை இஸ்லாம் என்றார்கள்
இஸ்லாம் எந்த கலாச்சாரத்தையும் போற்றவில்லை தூற்றவில்லை என்பதை அறியாமல் அரபு எழுத்துக்கள் மட்டுமே இஸ்லாம் என தூக்கி வந்த அந்த புதிய சமூகம்...
தங்களது வெளிநாட்டு போக்குவரத்தின் மூலம் ஹவாலா உண்டியல் தங்கம் கடத்தல் போன்ற இரண்டாம் நம்பர் வேலைகளை செய்ய ஆரம்பித்தது..

அரசாங்கத்தை ஏமாற்றுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதை வகையாக மறைத்து ஓரிறைக்கொள்கை மட்டும் இருந்துவிட்டால் போதும் அதுவே இஸ்லாம் என்று வட்டி மற்றும் வரதட்சணை வாங்குவதற்கு வியாக்கியானம் சொல்லிக்கொண்டது..
அதிலிருந்தே இன்னொரு சமூகம் உருவாகியது தாங்கள் கொண்டு வந்ததில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமென இனிய எளிய இஸ்லாமை இறுக்கமான ஒரு சமூகமாக மாற்றி தான் வாழுமிடத்தில் வாழும் மாற்றுமத சகோதரர்களின் பிரச்சனைகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்காமல் எங்கோ உள்ள பாலஸ்தீனியனுக்கும் சிரியனுக்கும் கொடிதூக்கி அருகிலிருந்த மனிதர்களை அந்நியமாக்கியது...
அந்த இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த சமூகம் இஸ்லாமியனாய் வாழ்ந்தது..
இன்று வாழ்கிற சமூகம் இஸ்லாமியனாய் நடிக்கிறது..
இன்று வாழ்கிற சமூகம் இஸ்லாமியனாய் நடிக்கிறது..
இந்திய இஸ்லாமியர்களில் நூற்றுக்கு தொன்னுறு சதவீதம் பேருக்கு இஸ்லாம் என்பது வாழ்வியல் முறை என்பதே தெரியாது அவர்களுக்கு அது ஒரு அல்லாசாமி....
No comments:
Post a Comment