Wednesday, January 15, 2020

உடன்பிறப்பே...

நேற்று பார்ப்பன பத்திரிக்கை துக்ளக்கின், பார்ப்பன கூட்டத்தின் நடுவே உபசனாதிபதி முன்னிலையில், ரஜினியால் உனக்கேற்ப்பட்ட இழிவுக்கு மருந்தாக இந்த மடல்.
முரசொலியின் தலைப்புச்செய்தியைக் கூட படிக்காத பாமர திமுக தொண்டனின் அக்குளில் முரசொலி தவழ்ந்திருப்பதை நான் பலமுறை கண்டதுண்டு.
பல பத்திரிகைகள் இருக்கும் மக்கள் மாமன்றத்தில், பஜ்ஜி எண்ணையை துடைக்க நீ கொண்டுபோகும் அழகை ரஜினி கண்டு கொண்டு விமர்சித்ததை கண்டேன். என் கண்கள் பனித்தன. ஒரு தொண்டன் 20 முரசொலியை மன்றத்திலிருந்து திருடிச் செல்வான். விசாரித்ததில் கூட்டுக்குடும்பம். குழந்தைகள் அதிகம் என்று அறிந்தேன். அய்யகோ...தண்ணீர் பஞ்சம் போலும்.
பார்ப்பனர்களால் ஏற்பட்ட இந்த அவமானத்திற்கு ஒரே மருந்தாக பட்டி தொட்டிகளில் உள்ள பரோட்டாக்கடை, அடுமனை, பலகாரக் கடைகள், கட்டணக் கழிப்பிடங்கள் அனைத்திலும் முரசொலி கிடைக்க ஆவன செய்யப்படும். இதன் செலவை நொண்ணா அறிவாலய அறக்கட்டளை ஏற்கும்.
நீ செய்ய வேண்டிய மகத்தான பணி ஒன்றே ஒன்று தான். முரசொலியை நான்கு பேர் கண்ணில் படும்படி அக்குளில் வைத்துக்கொண்டு வீரு நடை போடு.
களைப்பாக உள்ளது. இன்று சமாதியில் சர்க்கரைப்பொங்கலில் முந்திரியும், நெய்யும் இல்லாமல் இருந்தது. அந்த சமையல் காரனை கண்டுபிடித்து, தினமும் முரசொலியை மனப்பாடம் செய்து தேனாம்பேட்டை சிக்னலில் சத்தமாக படிக்கும் படி தண்டனை கொடு.
ஒரு பழமொழி படித்து நிறைவு செய்கிறேன்.
துண்டுச்சீட்டு படித்தாரே வாழ்வார் வாழாதார்
முரசொலி மடித்து பின்செல்பவர்.
அநீதி வீழும்...அறம் வெல்லும்
மு.க

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...