Thursday, January 2, 2020

க.பரமத்தியில் ஜோதிமணி-செந்தில் பாலாஜி இன்று திடீர் சாலை மறியல்.

க.பரமத்தியில் ஜோதிமணி-செந்தில் பாலாஜி இன்று திடீர் சாலை மறியல்
ஜோதிமணி எம்.பி., செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. ஆகியோர் இன்று காலை கட்சியினருடன் சேர்ந்து சாலை மறியல் செய்த காட்சி.


















நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பதவிகளில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றியை மறைத்து அந்த 2 வார்டுகளில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் க.பரமத்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். அதிகாலை 3 மணிக்கு தொடங்கிய போராட்டம் இன்று காலை 10.15 மணி வரை நீடித்தது.

இதில் ஜோதிமணி, செந்தில் பாலாஜி மற்றும் கட்சியினர் பங்கேற்றிருந்தனர். ஆனால் தேர்தல் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை.

இந்த நிலையில் அதிகாரிகள் வராததை கண்டித்தும், தி.மு.க. மற்றும் காங். வேட்பாளர்களின் வெற்றியை அறிவிக்க கோரியும் ஜோதி மணி எம்.பி.யும், வி.செந்தில் பாலாஜியும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையம் முன்பு கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் க.பரமத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...