லோக்சபாவில், '2ஜி ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, பா.ஜ., - தி.மு.க., இடையே கடும் மோதல் ஏற்பட்டது.லோக்சபாவில், நேற்று கேள்வி நேரத்தின் போது, முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சரும், தி.மு.க., உறுப்பினருமான, ராஜா பேசியதாவது:
'வோடபோன், ஏர்டெல்' போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான, 1.47 லட்சம் கோடி ரூபாயை, உடனடியாக வசூலிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'வோடபோன், ஏர்டெல்' போன்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான, 1.47 லட்சம் கோடி ரூபாயை, உடனடியாக வசூலிக்கும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கற்பனை தொகை
ஆனால், 'இந்த நிலுவைத் தொகையை, உடனடியாக செலுத்த தேவையில்லை; படிப்படியாக, 20 ஆண்டுகள் வரையில், அந்நிறுவனங்கள் செலுத்தலாம்; அதற்கு, வட்டி வசூலிக்கவும் தேவையில்லை' என, உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது போன்ற முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம், அரசுக்கு ஏன் ஏற்பட்டது.
யார் இந்த முடிவை எடுத்தது. எங்கள் மீது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இது, வெறும் கற்பனை தொகை. இப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட குற்றச்சாட்டு. அந்த குற்றச்சாட்டு, நிரூபிக்கப்படவும் இல்லை.'வெறும் கற்பனை தொகைக்கே, ஒரு அரசு பலியாகிவிட்டது.
யார் இந்த முடிவை எடுத்தது. எங்கள் மீது, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறப்பட்டது. இது, வெறும் கற்பனை தொகை. இப்படி இருந்திருந்தால், இப்படி நடந்திருக்கலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்ட குற்றச்சாட்டு. அந்த குற்றச்சாட்டு, நிரூபிக்கப்படவும் இல்லை.'வெறும் கற்பனை தொகைக்கே, ஒரு அரசு பலியாகிவிட்டது.
ஆனால், இப்போது, 1.47 லட்சம் கோடி ரூபாய் என்பது, உண்மையான தொகை. அரசுக்கு வர வேண்டிய தொகை.நிலுவைத் தொகையை கட்ட வேண்டும் என வழக்கு போட்டதே, இந்த அரசு தான். அதே அரசு, தற்போது உச்ச நீதிமன்றத்தில், 'பல்டி' அடித்துள்ளது...' இவ்வாறு, ராஜா, கூறினார்.
இதற்கு, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:இந்த விவகாரம், நீதிமன்றத்தில் உள்ளதால், அது குறித்து, எதுவும் கூற முடியாது. உறுப்பினரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை. கடந்த, ஐ.மு.,கூட்டணி ஆட்சியில், தொலைத் தொடர்பு துறை, எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது என்பது குறித்து, இந்த சபையில், தனி விவாதம் நடத்த வேண்டும்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், அரசுக்கு, எவ்வளவு இழப்பு ஏற்பட்டது என்பதை, இந்த சபை அறிய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். விவாதத்துக்கு தயார்இதற்கு ராஜா, ''இது பற்றிய விவாதத்துக்கு, நானும் தயார். விவாதத்தை எப்போது வைத்துக் கொள்ளலாம். இப்போதே, இந்த நொடியே கூட, விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,'' என்றார்.
ராஜாவுக்கு ஆதரவாக, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், தயாநிதி உட்பட, தி.மு.க., - காங்கிரஸ் எம்.பி.,க்கள் பலரும் குரல் கொடுத்தனர். இதற்கு, மத்திய அமைச்சர்கள், பியுஷ் கோயல், பிரஹலாத் ஜோஷி உட்பட பா.ஜ., - எம்.பி.,க்கள் பதிலடி கொடுத்தனர். இதனால், சபையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.
சபாநாயகர், ஒம் பிர்லா தலையிட்டு, ராஜாவை சமாதானப்படுத்த முயற்சித்தார்.ஆனால், சமாதானமடையாத ராஜா, ''என்னுடன் விவாதத்துக்கு யார் தயார் என்பதை கூறுங்கள்,'' என்றார். இதற்கு சபாநாயகர், ''தனி விவாதத்துக்கு அனுமதி கேட்டு, கடிதம் தாருங்கள். இன்னொரு நாளில், இதை விவாதிக்கலாம். இப்போது அமைதியாக இருங்கள்,'' என்றார்.
'பி.எஸ்.என்.எல்., விற்பனைக்கல்ல'
லோக்சபாவில், தி.மு.க., - எம்.பி.,யும், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி, ''பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 33 சதவீத ஊழியர்கள், வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். லாபத்தில் இயங்குவதாக கூறும் நிலையில், இந்த நிறுவனத்தை விற்க, அரசு முயற்சிப்பது ஏன்; பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் எத்தனை வாடிக்கையாளர்கள், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மாறினர் என்ற விபரத்தை, அரசு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர், ரவிசங்கர் பிரசாத், ''பி.எஸ்.என்.எல்.,லின் பழைய கதையை தோண்டினால், அது பெருங்கதையாக போய்விடும். எனினும், இந்நிறுவனம் சீரமைக்கப்படுமே தவிர, நிச்சயம் விற்கப்படமாட்டாது,'' என்றார்.
No comments:
Post a Comment