சிவனின் வாகனமாய் நந்திதேவர் உள்ளார் என அனைவருக்கும் தெரியும்.
பிரதோஷத்தின்போது நந்திதேவருக்குதான் அபிஷேகம் ஆராதனை எனவும் அனைவருக்கும் தெரியும்.
நந்தி தேவருக்கு தனிக்கோயில் இருப்பதே அபூர்வம். அதிலும் ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் தரிசிப்பது மேலும்அபூர்வம்.
அத்தகைய சிறப்புமிக்க நவ நந்திகள் ஆந்திர மாநிலத்தில் நந்தியால் என்னும் ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
சிவாதனன் என்பவரின் மகனான நந்தன் தவம் புரிந்து சிவபெருமானுக்கு வாகனமாக வரம் வாங்கியது இந்த இடத்தில்தான். இந்த இடத்தின் பெயர் ‘நந்தி மண்டலம்’ என அழைக்கப்படுகிறது.
இங்கே நந்திகேஸ்வரன் ‘மகா நந்தி’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.
சிவ நந்தி, பிரம்ம நந்தி, விஷ்ணு நந்தி,விநாயக நந்தி, பத்ம நந்தி, சூரிய நந்தி, சோம நந்தி, கருட நந்தி, நாக நந்தி, என்ற பெயரில் ஒன்பது நந்திகள் இங்கு இருப்பது எங்குமில்லாத சிறப்பாகும்.
இங்கு சிவபெருமான் பெயா் மஹா நந்தீஸ்வரரா் சுவாமி என்ற பெயாில் அருள்பாலிக்கிறாா் .
சித்தா்கள் போற்றி
#நடமாடும்சித்தா்கள்.
#நடமாடும்சித்தா்கள்.
No comments:
Post a Comment