ரத்தச்சோகை இருந்தால் பீட்ரூட், பசலைக்கீரை, ஆப்பிள், கேரட், எலுமிச்சை, உலர்ந்த திராட்சை, முளைகட்டிய பயறு போன்றவற்றில் எதையாவது தனியாக எடுத்துக் கொள்வது நல்லது.
வாதக் கோளாறுகளுக்கு அன்னாசி, பப்பாளி, பாகற்காய், சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, வேப்பம்பூ போன்றவற்றில் எதையாவது தனியாக ஜூஸ் செய்து குடிக்கலாம்.
அமிலம் அதிகமாக இருந்து நெஞ்செரிச்சல், செரிமானக்கோளாறு இருந்தால் வெள்ளரி, ஆப்பிள், தர்பூசணி, பேரிக்காய், ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பழங்களை ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் பாகற்காய், தர்பூசணி, புரோக்கோலி, வேப்பங்கொழுந்து, பசலைக்கீரைகளில் ஜூஸ் செய்து குடிக்கலாம்.
முகப்பரு தொல்லைக்கு வெள்ளரி,பப்பாளி, எலுமிச்சை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் பழங்களின் செய்த ஜூஸ் நல்லது.
ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, அன்னாசி, ஆப்பிள், கேரட், வெங்காயம் போன்றவற்றின் ஜூஸ் குடிக்கலாம்.
உடல்பருமன் உள்ளவர்கள் தக்காளி, கேரட், வெண்பூசணி, சுரைக்காய், எலுமிச்சை, ஆரஞ்சு, தர்பூசணி, கிர்ணி போன்றவற்றின் ஜூஸ்களை அருந்துவது நல்லது.
மெனோபாஸ் காலங்களில் கேரட், பீட்ரூட், வெள்ளரி, மாதுளை, அத்தி, பேரீச்சை போன்ற பழங்களின் ஜூஸ்களை அருந்தலாம்.
உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுகளை வெளியேற்ற கோதுமைப்புல், அறுகம்புல், கேரட், பீட்ரூட் மற்றும் எல்லா பச்சைநிற காய்கறிகள் ஜூஸ்களை குடிக்கலாம்.
தசைப்பிடிப்பு விலக செலரி, தண்டுக்கீரை ஜூஸ், இளநீர் குடிக்கலாம்.
ரெடிமேடு ஜூஸ் அருந்துவதால் உடல் நலத்துக்கு நல்லது, உடலுக்கு ஊக்கம் தருகிறது என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது 100 சதவிகிதம் தவறானது.
ரெடிமேடு ஜூஸ்களில் வெள்ளைச் சர்க்கரை, உப்பு, குளோரின், நிறமூட்டிகள், கார்ன் சிரப் (corn syrup), கஃபெய்ன் (caffeine), ஃப்ளூரைட் (fluoride) உள்ளிட்ட வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் கெட்டுப்போகாமலிருப்பதற்காக பதப்படுத்தப்படுகிறது. இதனால் உடலில் உள்ள மியூக்கஸ் லேயர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன் புற்று நோய் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே இயற்கை பழச்சாறுகளே நல்லது. இவை உடல்நிலையை சமச்சீராக வைத்திருக்க உதவும்.
பழங்களை அப்படியே சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்கும். ஆனால் ஜூஸ் ஆக்கிக் குடிப்பதால் நார்ச்சத்து கிடைக்காது என்றாலும் மற்ற அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அத்துடன் உடனடியாக எனர்ஜி கிடைக்கும்.
ஜூஸ் எப்போது குடிக்கலாம் என்பது தெரியாமலேயே கண்ட கண்ட நேரங்களில் குடித்துக் கொண்டிருக்கிறோம். உணவு உண்பதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன் ஜூஸ் அருந்துவதே நல்லது. உணவுக்குப் பிறகு ஜூஸ் அருந்தக்கூடாது. உணவு உண்ணும்போதோ, உணவு உண்டதுமோ தண்ணீர் அருந்துவது என்பதே ஏற்புடையதல்ல. உணவு உண்டு அடுத்த ஒரு மணி நேரம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். ஆகவே கண்ட நேரத்திலும் ஜூஸ் குடிப்பதால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதுடன் தலைவலி, வாந்தி ஏற்படலாம்.
ஜூஸ் - ஸ்மூத்தி
பழங்களை அரைத்து சாறாக்கி வடிகட்டிக் குடித்தால் அது ஜூஸ். சாறாக்கப்பட்டதும் வடிகட்டாமல் அப்படியே குடிப்பதுதான் ஸ்மூத்தி. இந்த ஸ்மூத்தியில் கரையும், கரையா நார்ச்சத்துகள் இரண்டும் நிறைந்திருக்கும். நார்ச்சத்து நிறைந்த ஸ்மூத்தியை அருந்துவதால் வயிறு நிறைந்த திருப்தி இருக்கும். இது ரத்த சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். செரிமான மண்டலத்தை சரியாக வழிநடத்தும்.
கரையும் நார்ச்சத்துகள் கொலஸ்ராலின் அளவைக் குறைக்கும்; மாவுச்சத்துகளை மெதுவாக கிரகிக்கும். ஆப்பிள், பிளம், பேரிக்காய் போன்றவற்றில் கரையும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
கரையாத நார்ச்சத்துகள் குடலில் இருக்கும் நீரை மலத்துடன் வெளியேற்றும். வெள்ளரிக்காய், கேரட், தண்டுக்கீரை, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகள் மற்றும் உலர் திராட்சை, பேரீச்சை போன்றவற்றில் கரையாத நார்ச்சத்துகள் உள்ளன.
மில்க்ஷேக்
மில்க் ஷேக் - ஸ்மூத்தி இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. மில்க் ஷேக்கில் பால் சேர்க்கப்படுகிறது. ஆனால் பழங்களுடன் பால் சேர்க்கப்படுவதால் அமிலத்தன்மையை ஏற்படுத்தும். இது பிரச்னையை ஏற்படுத்தும் என்பதால் தேங்காய்ப்பால் சேர்ப்பதே நல்லது.''
No comments:
Post a Comment