Sunday, June 7, 2020

நாம் எல்லோரும் 100% நமது அற்பணிப்புகளை கடமையில் காட்டவேண்டும்.

ஏற்கனவே கிட்டத் தட்ட 80% தொழில்கள் இயங்கத் தொடங்கி விட்டன. இன்னும் 10% தொழில்கள் நாளை 08-06-2020 முதல் இயங்கும். ஆகவே, பொருளாதாரச் சக்கரம் சுழலத் தொடங்கி விட்டது. இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நிலைமை ஓரளவு (80%) சீராகும். அஞ்சத் தேவை இல்லை.
அரசு தொடங்கி, மத்திய வர்க்கம் வரை அனைவருமே கஷ்டங்களைப் பங்கு போட்டுக் கொள்ளப் பழக வேண்டும். அரசாங்கம் 30%-ம், பெருந்தொழில் நிறுவனங்கள் 20%-ம், நடுத்தர அளவு நிறுவனங்கள் 15%-ம், பணக்காரர்கள் 10%-ம், மத்திய தரக் குடும்பங்கள் 5%-ம் இழப்புகளை ஏற்பதோடு, கூடுமான வரையில் பிறருக்கும் மனதார உதவ வேண்டும். இந்த நிலை - அதாவது தியாகம் - இன்னும் 6 மாதங்கள் முதல் ஓராண்டுக்கு நீடிக்கலாம். இதற்கு ஒரே வழி, வீண் செலவுகளைத் தவிர்ப்பது மட்டுமன்றி, வேறு பல செலவுகளையும் நிறுத்தி வைப்பது தான். ஓட்டல்கள், சினிமா, அனாவசியமாக ஊர் சுற்றுவது, விலைமதிப்புள்ள வாகனங்கள், ஆபரணங்கள், ஆடை, அணிகலன்கள் வாங்குவது போன்ற செலவுகளை அறவே நிறுத்த வேண்டும்.
இது எப்படி முடியும் என்றால், சில உதாரணங்கள் கொண்டு விளக்குகிறேன்:
1. அரசாங்கம் பல பொருள்கள், சேவைகள் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும்.
2. அரசாங்கம் ஏழைகளைத் தவிர, வேறு எவருக்கும் எந்த வகை இலவசங்களையும் தரக் கூடாது. நடுத்தர மக்களுக்கு மட்டும் அடிப்படைத் தேவைகளில் சில சலுகைகளைக் கொடுக்கலாம். இதில் மிகுந்த கண்டிப்புக் காட்ட வேண்டும். எந்த வித அடிப்படை விதிகளையும் பின்பற்றாது, இலவசங்களைக் கணக்கின்றி வாரி வழங்குகின்ற மாநிலங்களுக்கு, மத்திய அரசு பல் வேறு திட்டங்களின் கீழ் உதவி செய்வதை அடுத்த 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி விட வேண்டும். சரி, மத்திய அரசே அப்படிச் செய்தால்? மத்திய அரசு, அடுத்த ஆண்டு புதிய வரிகள் விதிக்கும் உரிமையை இழக்கும். இதற்குத் தகுந்தாற் போல, பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்.
3. அச்சுறுத்தல் அதிகம் இல்லாத நபருக்கு, அரசுப் பாதுகாப்புச் செலவுகளை முழுவதுமாக நிறுத்த வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.
4. அரசாங்கமும், வங்கிகளும் வசதியுள்ளவர்கள், மிகப் பெரிய அளவில் வரி, கடன் பாக்கி வைத்திருப்பவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். அதற்கு நீதிமன்றங்களும் முழு அளவில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
5. அரசாங்கம், ஆடம்பர விழாக்களை நடத்துவது, தேவையற்ற கூட்டங்கள் நடத்துவது ஆகியவை தடை செய்யப்பட வேண்டும்.
6. மக்கள், தங்கம், வைர நகைகள் வாங்குவதை, அடுத்த ஆண்டு வரை ஒத்தி வையுங்கள்.
7. திருமணம், பிறந்த நாள் போன்றவற்றில் ஆடம்பரச் செலவுகளைத் தவிருங்கள்.
8. யார் கார் வாங்க எண்ணினாலும், ஆரம்ப மற்றும் நடுத்தர விலைகளில் (3 லட்சம் முதல் 15 லட்சம் ரூபாய்க்குள்) உள்ளவற்றை வாங்குங்கள்.
9. பொதுமக்கள், தேவை ஏற்பட்டாலும் கூட, பெரிய உணவு விடுதிகள் செல்வதை விடுத்து, சிறிய, நடுத்தர உணவு விடுதிகளை நாடுங்கள்.
10. பகட்டான ஆடைகளை வாங்குவதைச் சில காலம் (ஓராண்டு வரை) நிறுத்த வேண்டும்.
11. வீடுகளில் ஏற்கனவே உள்ள பொருள்களை, மீண்டும் அனாவசியமாக வாங்கக் கூடாது.
12. உணவு தானியங்கள் முதல், நாம் அன்றாடம் உபயோகிக்கும் பல பொருள்களை அதிக அளவில் வாங்கிக் குவிக்கக் கூடாது. அது, பொருள்களைப் பதுக்கி வைப்பதற்குச் சமம். இதனால், செயற்கைப் பஞ்சம் உருவாகி, விலைவாசி பன்மடங்கு உயர வாய்ப்புள்ளது.
13. பெரிய செலவுகள் அனைத்தையும் ஒத்திப் போட வேண்டும் - அது முதலீடே ஆயினும்.
14. அரசாங்கம் செய்யத் திட்டமிட்டுள்ள 'Projects' எல்லாவற்றையும் விரைவில் தொடங்கி, சுணக்கம் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.
தொழில்வளர்ச்சியிலும், பொருளாதார வளர்ச்சியிலும், நம்மை விட முன்னேறிய பல நாடுகளே திணறிக் கொண்டிருக்கும் வேளையில், மேற்சொன்ன தியாகங்களையும், செலவுக் குறைப்புகளையும், சேமிப்புகளையும் நாம் ஒவ்வொருவரும் செய்து தான் ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...