Sunday, June 7, 2020

சாக்குப் பையை சிறுக தின்ன எரும்பு சர்க்கரையையும் சேர்த்து தின்ன சர்க்காருக்கு விளக்கம் கொடுத்த சாகச தலைவனின்.

செடிக்கு சேதாரமில்லாமல்
கடலையை மட்டுமே
கச்சிதமாய் கழற்றும்
கரசேவகர்.
நெல்லுக்குத் தெரியாமல்
உமியை ஊமையாக்கி
அரிசியை அபேஸ் செய்யும்
ஆற்றல் மிக்கவர்.
காம்பைக் கிள்ளாமல்
தோலை தொடாமல்
பழத்தை மட்டுமே
பாங்காக எடுப்பவர்.
தாறுமாறாக
தவறுகள் பலசெய்தும்
தடயம் கிட்டாமல்
தப்பிடும் தலைவன்.
கூவத்தில் படகிட்டு
கூடைகூடையாய் தான்சுருட்டி
'முதல்' லையெல்லாம் தனதாக்கி
'முதலை' மேல் கட்டியவர்.
நாணயம் இல்லாது
நா நயத்தாலே
நான்குமுறை 'முடி' சூட்டி
நம்தமிழனை 'மொட்டை'யடித்தவர்.
விஞ்ஞானம் வளர்ச்சிக்கல்ல
வாரிச் சுருட்டவேயென
வேதமாக விட்டுச் சென்ற
வேர்பிடித்த ஊழலாளி.
தமிழ் தமிழென்றே
தமிழன் தவளையென
தட்டேந்தி நிற்கவைத்து
தம்குடும்பம் தழைக்க வைத்தவர்.
புழுவினை தூண்டில் கட்டி
புதையலாம் மீன்பிடியாய்
இலவச டிவி காட்டி
கேபிளால் குடும்பம் செழித்தாய்.
பூவாசம் தேன்வாசம்
தெவிட்டாமல் எழுதினாய்
'வனவாசம்' வாசித்தால்
வரும்வாசம் துர்நாற்றம்.
ஒன்னரை மணிநேரம்
உண்ணா நோன்பெனவே
மெரினாவில் நாடகமிட்டு
ஈழத்தை இடுகாடாக்கினாய்.
ஏதடா எல்லாம்
குறையே சொல்கின்றாய்
நிறையேதும் இல்லையாயெனும்
நின்கேள்வி கேட்கிறது.
கடைசி ஐந்தாண்டுகள்
கரம்நீ பற்றியதனால்
மின்கட்டணம் கட்டாமலே
மிச்சமான தெங்கள் பணம்.
பாளையங்கோட்டை சிறைபட்டு
பாம்பினையும் பல்லியும்
பாய்சுருட்டி ஓடவைத்த
பாங்கினை யும் பாராட்டுவோம்.
நீபிறக்கா திருந்திருந்தால்
தமிழன் குடிக்காதிருந்திருப்பான்
இலவசத்தை காட்டாதிருந்திருந்தால்
தமிழன் உழைக்கக் கற்றிருப்பான்.
பிறந்தநாள் வாழ்த்துகிறோம்
பிறந்து மீண்டும் வரவேண்டாம்
பிறிதொரு பிறவியிலாவது
பிழைத்துப் போகட்டும் தமிழன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...