Monday, June 1, 2020

17ம் நூற்றாண்டு சம்பவம்.

இலங்கையில் ஆறுமுகம் தொண்டைமான் மறைந்துவிட்டார் என்பது சாதாரணமாக கடந்து செல்ல கூடிய செய்தி அல்ல‌
இலங்கையில் தமிழர்கள் என ஈழதமிழரை மட்டும் சொல்லமுடியாது, அவர்கள் பூர்வீக தமிழர்கள் பின்னாளில் வெள்ளையன் மலையகம் எனப்படும் பகுதிகளை காடுகளை அழித்து தேயிலை தோட்டங்களை அமைக்க ஏகபட்ட தமிழர்களை இந்தியாவில் இருந்து அழைத்து சென்றான்
இங்கே விவசாயம் தடுமாற ஆரம்பித்த காலம் அதுதான். 17ம் நூற்றாண்டு சம்பவம் இவை
அங்கு சென்ற தொழிலாளர்கள் இங்கே வறுமைபட்டவர்கள்,கூலிகள், அன்றாடம் காய்ச்சிகள் சுருக்கமாக சொன்னால் தாழ்த்தபட்டோர் ஏராளம்
அவர்கள் இலங்கை சென்றார்களே தவிர ஈழதமிழன் அவர்களை ஒதுக்கித்தான் வைத்தான், தமிழ் பேசுவோர் என்றாலும் சாதி, அந்தஸ்து, வந்தேறிகள் என அவர்கள் பட்டபாடு கொஞ்சமல்ல‌
ஈழதமிழன் நாயினும் கீழாக அவர்களை வைத்திருந்தான்
சுதந்திரம் நெருங்க நெருங்க இலங்கையில் சிங்கள எழுச்சி ஏற்பட்டது, ஆனால் ஈழதமிழருக்கும் சிங்களனுக்கும் நெருக்கம் இருந்தது, இருவருக்கும் அரசியல் கணக்கும் இருந்தது
சுதந்திரம் அடைந்ததும் இந்த கூட்டணி ஆடியது, அதிகம் படிப்பறிவில்லா இனமான சிங்கள இனத்தை ஈழதமிழினம் ஆட்டி வைத்தது
இலங்கையில் மலையாளிகளை இந்த கூட்டணி விரட்டியது, தமிழ்பேசும் இஸ்லாமியரை அடக்கியது, வாக்கு எண்ணிக்கையில் கூடிவிட கூடாது என்பதற்காக மலையக தமிழர் 5 லட்சம் பேரை கதற கதற இந்தியாவுக்கு அனுப்பியது சிங்கள ஈழதமிழன் கூட்டணி அரசு
ஒரு ஈழதமிழனும் கண்டிக்கவில்லை, காரணம் இந்த தமிழன் பீ தமிழன், வடக்கத்திய வந்தேறி
அந்ந சூழலில் மலையக மக்கள் எனும் சபிக்கபட்ட, உரிமையற்ற, கேட்க ஆளில்லா அந்த சமூகத்துக்கு சவுமியமூர்த்தி தொண்டைமான் என்றொரு தலைவர் எழும்பினார்
ஆம், அவர் இராமநாதபுர முன்னோர்களின் வாரிசு, அவர் அந்த மலையக மக்களை காத்து நின்றார்
இந்தியாவோடு அவருக்கு தொடர்பு இருந்தது, ஈழசிக்கல் என்பது ஈழதமிழரை மட்டும் பேசிற்று மலையக மக்களை புறந்தள்ளியது, ஆனால் அவர்கள் உரிமையும் பேசியவர் சவுமியமூர்த்தி தொண்டைமான்
இந்திராவோடு நல்லுறவில் இருந்தார், சே குவாரே இலங்கை வந்தபொழுது சந்தித்தவர் அவரே
அந்த குறிப்பிடதக்க தலைவர் சவுமியன் தொண்டைமானின் பேரனே ஆறுமுக தொண்டைமான்
இவர் மலையக தமிழர் எனினும் படித்தது தமிழக ஏற்காட்டிலும் இன்னும் சில இடங்களிலுமே பின்னர் கொழும்பு திரும்பினார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எனும் மலையக மக்கள் கட்சியின் தலைவராக விளங்கிய அவரின் அரசியல் பயணம் 1990ல் இருந்து தொடங்குகின்றது
இலங்கை அரசியலில் ஆறுமுகம் தொண்டைமானின் பங்கு மறக்கமுடியாதது, இலங்கை தமிழர் சிக்கல் என்பது ஆழ நோக்கினால் ஈழதமிழரின் பிரச்சினை அன்றி வேறல்ல, அல்லவே அல்ல‌
மலையக மக்களை புலிகள் ஒரு துரும்பாக கூட மதிக்கவில்லை, சிங்களன் அரவணைத்த அளவு கூட புலிகள் மதிக்கவில்லை, ஏன் என்றால் அதுதான் யாழ்பாண அரசியல்
தமிழ் பேசுவதால் ஒருவன் ஈழ‌ தமிழனாகிவிட முடியாது என்பது இலங்கை நிலவரம்
புலிகளின் தமிழீழத்திலோ இல்லை அவர்கள் கொடுத்த வரைபடத்திலோ மலையகம் வராது, மலையக மக்களும் வரமாட்டார்கள், காரணம் ஈழதமிழன் வேறு மலையக தமிழன் வேறு என்பது அவர்கள் கொள்கை
அருகிருக்கும் மலையக தமிழரை , தமிழ்நாட்டின் வாரிசுகளை ஈழத்தில் சேர்க்கமாட்டார்களாம், ஆனால் ஈழதமிழனுக்கு மொத்த தமிழ்நாடும் உலக தமிழரெல்லாம் பொங்க வேண்டுமாம்
புலிகளின் உறுமலில் இந்த அப்பாவி மான்களின் கண்ணீரோ சிக்கலோ உலகுக்கு தெரியாமல் போனது, தமிழக அரசியல்வாதிகளும அதை உணர மறுத்தனர்
காரணம் ஈழதமிழன் சிக்கலை சொன்னால் பணமும் ஆமைகறியும் கிடைக்கும், பாவம் வக்கற்ற மலையக தமிழனிடம் என்ன உண்டு?
தாழ்த்தபட்ட அம்மக்களுக்காக தமிழக சாதி சங்கங்களும், தாழ்த்தபட்டோருக்கான கட்சிகளும் பேசாமல் பாசிச புலிகள் பெருமையினை பேசியதுதான் கொடுமையின் உச்சம்
மலேசிய தமிழர் சிக்கல் என சொன்ன பா.ரஞ்சித்தனார் மலையக பக்கம் உள்ள தாழ்ந்தபட்டோர் வாரிசுகளுக்காக வாய் திறக்கமாட்டார், காரணம் வசூல் வராது.
ஒரே அறுதலாக ம‌லையக மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருந்தது, மலையக மக்களும் இந்திய அரசை நம்பினர் அதன் பின்னணியில் ஓசைபடா காரியங்கள் நிகழ்ந்தன‌
சந்திரிகா அரசில் மலையக தமிழருக்கான ஒரு பிரதிநிதித்துவம் கொடுக்கபட்டது, அதை வாங்கி கொடுத்தார் ஆறுமுக தொண்டைமான்
1986ல் ஜெயவர்த்தனே ஏராளமான மலையக தமிழரை நாடற்றவர்கள் என அறிவித்தான்
ஏன் அறிவித்தான், அப்படி அறிவித்தால் அவர்கள் இந்தியா திரும்ப வேண்டும், திரும்பினால் ராஜிவுக்கு சிக்கல் ஏற்படும், புலிகளை ஆதரிக்கின்றாயா, என் நாட்டில் போராளிகளை தூண்டி விடுகின்றாயா, இதோ உன் வம்சா வழிகளை நீயே வைத்துகொள் என விரட்டியடிக்கும் தந்திரம்
ஆம், ராஜிவுக்கு அது பெரும் சிக்கலாகும்
இந்தியா அதை தடுக்கவே அமைதி ஒப்பந்தமும் அமைதி படையினை அனுப்பவும் துணிந்தது
ஆம் அன்று ராஜிவ் அதை செய்யாவிட்டால் 1 லட்சத்துக்கு மேற்பட்ட மலையக அகதிகள் இந்தியா வந்திருப்பார்கள்
அதை தடுத்ததுதான் சிங்களனுக்கும் கோபம், ஈழதமிழனுக்கு அதைவிட கோபம்
ஜெயவர்த்தனே கடைசிவரை அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுத்தான், ஒரு அரசியலாக சிங்கள அரசும் அதை பின்பற்றியது, ஆறுமுக தொண்டைமான் 2003ல் அந்த சிக்கலுக்கு தீர்வு கண்டு அவர்களை இலங்கையிலே குடியமர்த்தினார்
இதையெல்லாம் யாரும் சொல்லமாட்டார்கள்
இன்னும் ஏகபட்ட நல்ல திட்டங்களை மலையகத்துக்கு பெற்று கொடுத்தார், அரசு பணி முதல் கல்வி , தேயிலை கூலி உயர்வு என பல விஷயங்களை மலையக தமிழருக்கு பெற்று கொடுத்தார்
இலங்கை தமிழரின் வாழ்வு இந்திய அரசின் கரங்களில் உண்டு , இந்திய தமிழரின் ஆதரவில் உண்டு என்பதில் உறுதியாக இருந்தார்
ம.பொ.சி முதல் எல்லா தலைவர்களுடன் அவருக்கு தொடர்பும் இருந்தது
தமிழ்நாட்டுக்கு அடிக்கடி வந்த ஆறுமுகம் தொண்டைமான் திருச்செந்தூர், மதுரை ஆலயங்களில் தவறாமல் தரிசனம் செய்வார்
இந்தியாவில் ஜல்லிகட்டு முடக்கபட்டபொழுது அந்நிய தேசத்தில் இருந்து வந்த முதல் ஆதரவு குரல் அவருடையது.
அவரின் முத்தாய்பான வெற்றி மோடி அரசுடன் இணக்கமாகி , அதாவது இலங்கை இந்திய தூதரகம் இலங்கை அரசு போன்றவற்றுடன் நல்லுறவு பேணி ஹட்டனில் மிகபெரும் மருத்துவமனையினை கொண்டு வந்தது
ஆம் மோடி அதை 2017ல் தொடங்கி வைத்தது குறிப்பிடதக்க விஷயம், மலைய மக்களின் பெரும் வரபிரசாதம் அது
என்ன சொல்லுங்கள் சேகுவாரே எனும் மனிதநேயமிக்க தலைவனுக்கு பின் மலையக தமிழர் எனும் புறக்கணிக்கபட்ட தமிழர் பகுதிக்கு சென்ற முதல் உலக தலைவர் மோடி ஒருவரே
அந்த அளவு ஆறுமுக தொண்டைமான் மலையக தமிழருக்கு நல்ல விஷயங்களை செய்தார்
அவர் சாகும் சில நொடிகளுக்கு முன்பு கூட கொழும்பில் இந்திய தூதருடன் மலையக தமிழருக்கான சில நலதிட்டங்களை பேசிவிட்டுத்தான் வந்திருந்தார்
கடைசி நொடிவரை தங்களுக்காக உழைத்த நல்ல தலைவனை மலையகம் இழந்திருக்கின்றது, அந்த மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்
55 வயதே ஆன ஆறுமுக தொண்டைமான் இன்னும் பல காரியங்களை மலையக மக்களுக்கு பெற்று கொடுத்திருப்பார், ஆனால் அழவும் புலம்பவும் கதறவுமே உருவான அந்த அபலைகளின் நிம்மதி ஏனோ ஆண்டவனுக்கு பொறுக்கவில்லை
மறுபடியும் அழ விட்டுவிட்டான்
இன்னுமோர் நல்ல தலைவன் அங்கிருந்து உருவாகி வந்து மலையக மக்களை மீட்கட்டும், அவர்கள் வாழ்வு செழிக்கட்டும், அதில் ஆறுமுகம் தொண்டைமானின் ஆன்மா சாந்தி அடையட்டும்
கவனியுங்கள், ஆறுமுக தொண்டைமானின் மரணத்துக்கு தமிழகத்தில் சலசலப்பில்லை
ஏன்?
முதலவாது அவர் பத்து பைசாவுக்கு வருமானமில்லா மலையக தமிழரின் பிரதிநிதி
இரண்டாவது பிரபாகரனோடு அவர் துப்பாக்கி தூக்கவில்லை, அவருக்காக சாகவில்லை, மனித வெடிகுண்டுகளாகவும், இதர குண்டுகளாகவும் மலையக மக்களை அனுப்பி சாக கொடுக்கவில்லை.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...