மணி என்ற ஒரு அகதி சிறுவனை தத்து எடுத்து வளர்த்தாரே தலைவர் கலைஞர். அந்த சிறுவன் ஏன் ஸ்டாலினால் கொல்லப்பட்டான் என்று நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.
1990ல் தன் பதவியைக் காப்பதற்காக சிறப்புமுகாம் அமைத்து அகதிகளை அடைத்த கருணாநிதி அதன் பின் இரண்டு தடவை பதவிக்கு வந்தபோதும் அச் சிறப்புமுகாமை ஏன் மூடவில்லை என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழீழம்;தான் தீர்வு என்று டெசோ மாநாடு நடத்துவதும் பதவிக்கு வந்ததும் மத்திய அரசின் கொள்கையே தனது கொள்கை என்று கூறியது ஏன் என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை.
மாநில அரசுக்கு இன்னொரு நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த அதிகாரம் இல்லை என்று கூறிவிட்டு பின் ஏன் மெரீனா கடற்கரையில் உண்ணாவிரதம் இருந்தார் என்றும் நான் உங்களை கேட்க விரும்பவில்லை.
போர் நின்றுவிட்டது. உண்ணாவிரதம் வெற்றி என்று அறிவித்துவிட்டு அதன்பின் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை கேட்டபோது மழை நின்றாலும் தூவானம் விடவில்லை என்று கூறியது ஏன் என்று உங்களை நான் கேட்க விரும்பவில்லை.
தமிழ் மக்கள் இறக்கும்போது மகளின் பதவி விழாவில் கலந்துகொண்டது பற்றி கேட்டபோது சங்ககாலத்தில் ஒரு வீட்டில் இழவு நடக்கும்போது இன்னொரு வீட்டில் கலியாணம் நடந்ததாக கூறியது ஏன் என்றும் உங்களிடம் நான் கேட்க விரும்பவில்லை.
ஈழத் தமிழருக்காக முத்துக்குமார் தீக்குளித்து இறந்தபோது அதை காதல் தோல்வியில் மரணம் என்று கொச்சைப்படுத்pயது என் என்றும் நான் உங்களிடம் கேட்க விரும்பவில்லை.
நான் உங்களிடம் ஒரேயொரு கேள்வியை மட்டுமே கேட்க விரும்புகிறேன். சிகிச்சைக்காக வந்த பார்வதி அம்மாளை கொஞ்சம்கூட இரக்கமின்றி விமானநிலையத்தில் வைத்து திருப்பியதை என்ன சொல்லி நியாயப்படுத்தப் போகிறீர்கள்?
எதிரி மகிந்த ராஜபக்சா கூட அந்த பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதி வழங்கிய நிலையில் கலைஞர் இரக்கமின்றி திருப்பி அனுப்பியதை என்னவென்று அழைப்பது உடன் பிறப்புகளே?
குறிப்பு - தயவு செய்து உங்கள் தலைவர் கலைஞரை இகழ்வதாக சினம் கொள்ளாதீர்கள். எங்கள் வலிகளை உணர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment