Saturday, June 13, 2020

பல உண்மைகள் புரியும்......

உங்கள் வாழ்க்கையில் உங்களை ஞான பாதைக்கு அழைத்து செல்லும் அற்புதமான ஒரு கதை இன்றைய காலை பொழுதில்.....
ஒரு பாம்பாட்டி தன்னுடைய பிரம்பு கூடையோடு நடந்து கொண்டிருந்தான்.
வெயில் நேரம். நல்ல களைப்பு. ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். படுத்துத் தூங்கி விட்டான்.
அந்த நேரம் எப்படியோ அவனுடைய பாம்பு அந்த கூடையிலிருந்து தப்பி விட்டது.
பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டை நோக்கி ஊர்ந்து சென்றது.
அங்கே ஒரு மூன்று வயது குழந்தை. தத்தக்கா புத்தக்கா என்று நடந்து வந்தது.
இந்த பாம்பை பார்த்ததும் "ஐ.. பொம்மை!" என்று பாய்ந்து பிடித்து விட்டது.
அந்த நேரம் பார்த்து அந்த குழந்தையின் அம்மா வீட்டிலிருந்து வெளியே வந்தார்.
குழந்தை கையில் பாம்பை பார்த்து விட்டு அலறினார். அதைக் கேட்டு எல்லோரும் ஓடி வந்தார்கள்.
ஆனால் அவர்களில் யாருக்கும் பாம்பை நெருங்க தைரியம் இல்லை.
பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி "கண்ணு, அந்த பாம்பை கீழே போடு" என்று அலறினார்கள்.
"கடவுளே, எங்க குழந்தையை காப்பாத்து" என்று பிரார்த்தனை செய்தார்கள்.
இந்த சத்தம் கேட்டு பாம்பாட்டி எழுந்து கொண்டான். பரபரப்பாக ஓடி வந்தான்.
குழந்தை கையில் பாம்பை பார்த்ததும் பதறாமல் அருகே சென்று அதைப் பிடித்து கூடையில் போட்டான்.
"ஏன்ய்யா, உனக்கு பயமே இல்லையா?" கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
"எதுக்கு பயம்? அந்தப் பாம்புக்குதான் ஏற்கனவே பல் பிடுங்கியாச்சே!"
பாம்புக்கு பல் பிடுங்கப்பட்டு விட்டது என்பது தெரிந்த பாம்பாட்டிக்கும் பயமில்லை....
பாம்புக்கு விஷப்பல் உண்டு என்பதே தெரியாத குழந்தைக்கும் பயமில்லை..!
இந்த இரண்டுக்கும் நடுவே சிக்கிக் கொண்டவர்கள்தான், அரைகுறை ஞானத்தால் பயந்து.. பதறி.. அவதிப்படுகிறார்கள்.
உங்கள் பயங்கள் எந்த வகை?
அவற்றை போக்குவதற்கு...
பாம்பாட்டியின் வழியில் செல்வீர்களா...?
அல்லது குழந்தை வழியா...?
- வி.பத்மா என்பவர் எழுதிய ஜென்வழி என்ற நூலிலிருந்து.
இதன் சாரம் :- இந்த lockdown சூழ்நிலையில் தற்போது உங்களை பயப்படுத்திக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளோடு இக்கதையை ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள் நண்பர்களே!
பல உண்மைகள் புரியும்......
நன்றி!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...