Sunday, June 14, 2020

திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் நூதன கொள்ளை கொந்தளிப்பில் பயணிகள்.

சென்னையில் கொரனா தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலான விமானங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு தான் வருகின்றன. அப்படி வரும் விமான பயணிகள் கொரனா சோதனைக்கு பின் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறப்பு முகாமுக்கு அனுப்ப படுகிறார்கள். அப்படி அனுப்ப படுவதற்கு முன் ஒவ்வொரு விமான பயணிகளிடமும் போக்குவரத்து துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் பெரும் கொள்ளை அடிக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்க , திருச்சி விமான நிலையம் சென்றோம்.
நேற்று அதிகாலை 12:15 மணிக்கு தோகாவில் இருந்து ஒரு விமானம் 179 பயணிகளுடன் திருச்சி வந்தது. அப்படி வந்த விமான பயணிகள் அனைவரும் கொரனா சோதனை முடிந்த பிறகு அவரவர் மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அரசுபேருந்துகள், மற்றும் டிராவல் வேன்கள் மூலம் அனுப்பட்டனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்த சேவையை இலவசமாக செய்யாமல் ஒவ்வொரு பயணிகளிடம் அதாவது தஞ்சாவூர் என்றால் 1000 ரூபாய், திருவாரூர் மாவட்டத்திற்கு 1500 ரூபாய் மதுரை 1000 யிரம் ருபாய், விருதுநகர், தென்காசி, கோயம்பத்தூர், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு 1500 ரூபாய் வரை வசூல் செய்த பிறகே பேருந்தை எடுக்கின்றனர். அதேபோல் தான், டிராவல்ஸ் வேன்களுக்கும் மெகா கொள்ளை வசூல் செய்தபிறகே வண்டியை எடுக்கின்றனர். இதில் பல விமான பயணிகள் வேறு வழியில்லாமல் பணத்தை கொடுத்து விடுகின்றனர் இன்று அதிகாலை தஞ்சாவூர் கடலூரை சேர்ந்த பயணிகள் மாவட்ட நிர்வாகத்தினருடனும், நாங்களே ஊர் வந்து சேர்ந்தா போதும்னு இங்கே வந்தா இப்படி பகல் கொள்ளை அடிக்கிறீங்களே, இப்ப எங்கள் கிட்ட காசு இல்லை. எங்களை பதினைந்து நாள் தனிமையில் வச்சிறுவோம்னு நீங்கள் மிரட்டுவதோடு பணம் கொடுத்தாதான் வண்டியை எடுப்போம்னு சொன்னா, என்ன அர்த்தம் நாங்க எங்கே போவோம் முன்னமே எங்களுக்கு தெரியப்படுத்தனும்ல, என்று அதிகாரிகளிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார் பயணிகளில் ஒருவர். இவரைப்போல பலரும் மாவட்ட அதிகாரிகளை பிடி பிடி என பிடித்துவிட்டனர். கிட்டத்தட்ட நேற்று காலை மூன்று மணி வரை இந்த சம்பவம் நீடித்தது. மாவட்ட கலெக்டர் சிவராசு தான் உத்தரவு போட்டார் என்கிறார்கள் அங்குள்ள அதிகாரிகள். திருச்சி ஏர்போர்ட்டில் நடக்கும் இந்த கொள்ளைக்கு கொரனா வந்து செத்தே போயிடலாம் என்கிறார்கள் சில பயணிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...