Monday, June 1, 2020

விருகம்பாக்கம் அருள்மிகு சுந்திரவரதராஜ பெருமாள் ‌கோவில் குளம் (மெட்டுகுளம்) ஆக்கிரமிப்பு பிரச்சினையின் உண்மை நிலவரம்.

சுந்திரவரதராஜ பெருமாள் ‌கோவிலின் 15 ஏக்கர் சொத்து மீட்கப்பட்டு விட்டது போல ஒரு பதிவு வந்துள்ளது. உண்மை நிலவரத்தை விளக்க இந்த பதிவு
விருகம்பாக்கம் அருள்மிகு சுந்திரவரதராஜ பெருமாள் ‌கோவிலை சார்ந்தது சுங்கவார் சத்திரம் மற்றும் தண்ணீர் பந்தல். இந்த சத்திரத்திற்கு சொந்தமாக 14 ஏக்கர் நிலம் கோவிலின் அருகே இருந்தது. இதில் அரை ஏக்கர் பரப்பளவில் உள்ள மொட்டுக்குளமும் அடக்கம்.
அந்த காலத்தில் சத்திரங்களை தாலுக் ஃபோர்ட் பராமரிப்பது வழக்கம். 1910 ஆம் ஆண்டு சர்வேயில் இந்த சொத்து தாலுக் ஃபோர்ட் பெயரில் வந்தது. கால போக்கில் மூன்று ஏக்கர் நிலத்தை தவிர மீதி நிலங்கள் தனியார் பெயரில் மாறியது. இந்த மூன்று ஏக்கர் நிலத்தில் மெட்டுக்குளத்தை தவிர மீதி நிலத்தில் ஆக்கிரமிப்புகள் முளைத்தன.
1997 ஆம் ஆண்டின் பிறகு மெட்டுக்குளம் தூர்க்கபட்டு பல கோஷ்டிகள் இந்த நிலத்தில் பட்டா போட முயன்றன. இதில் உயர் நிலை அரசு ஊழியர்கள் உதவியுடன் பட்டா வாங்க உத்தரவு வாங்கியது ஒரு முஸ்லிம் மாஃபியா கும்பல்.
இதை எதிர்த்து இந்து முன்னணி போராட்டம் நடத்தியது. ஆலைய வழிப்பாட்டு சங்கம் சார்பாக டீஆர் ரமேஷ் ஒரு பொதுநல வழக்கு தொடுத்தார். டீஆர் ரமேஷின் வாதத்தை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம் பட்டாவை ரத்து செய்ய செய்து இந்த நிலம் யாருக்கு சொந்தம் என்று கலெக்டரை விசாரிக்க உத்திரவிட்டது. உச்ச நீதிமன்றமும் இந்த உத்திரவை உறுதி செய்தது.
முஸ்லிம் பார்ட்டி கலெக்டர் விசாரணைக்கு வரவில்லை என்று காரணம் காட்டி இரண்டு வருடங்களாக கலெக்டர் விசாரணையை முடிக்கவில்லை.
இந்த சரித்திரம் தெரியாத நான் குளம் காணவில்லை என்று குளத்தை மீட்க களத்தில் இறங்கினேன்.
பழைய வழக்கில் ஒரு மிக பெரிய குறைப்பாட்டை கண்டேன். அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் அந்த நிலம் ஒரு குளம் அதை மீட்க வேண்டும் என்று வாதம் வைக்க வில்லை.
அதனால் குளத்தை மீட்க நான் ஒரு புது வழக்கு தொடுத்தேன். கடவுள் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக அந்த வழக்கு ஆறு வருடங்களுக்கு முன் பழைய வழக்கில் தீர்ப்பு வழங்கிய அதே நீதிபதியிடம் சென்றது!
நீதிபதி கலெக்டரை பழைய விசாரணையை உடனே முடிக்க உத்தரவிட்டார். அறநிலையத்துறையை அங்கு ஒரு குளம் இருந்ததா என்று விசாரிக்க சொன்னார்.
அரசு தரப்பு பல முறை வாய்தா வாங்கியதால் பழைய விசாரணையோடு அங்கு குளம் இருந்ததா என்று விசாரிக்க நீதிமன்றம் உத்திரவிட்டபட்டது.
இந்த முறை கலெக்டர் விசாரணையை வேகமாக நடந்தது! ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இரண்டு வருடங்களாக டிமிக்கி கொடுத்த முஸ்லிம் பார்ட்டி யும் விசாரணையில் ஒழுங்காக கலந்து கொண்டது!
விசாரணையில் ஆஜர் ஆன அத்துணை பார்டிகளும் அறநிலையத்துறையை சேர்த்து முஸ்லிம் பார்ட்டியை தவிர்த்து குளத்தை மீட்க வேண்டும் என்று ஒருமுகமாக மனு வைத்தனர்.
பல சுற்று விசாரணை பிறகு இறுதி ‌சுற்றிற்கான நாளை கலெக்டர் குறித்தார். ஆனால் விசாரணைக்கு மூன்று நாட்கள் முன்பு கலெக்டர் மாற்றப்பட்டார். அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லா கலெக்டர் அலுவலக ஊழியர்களும் மாற்றப்பட்டார்கள்.
பல மனுக்கள் பல மாதங்கள் கடந்து விசாரணை நடக்கவில்லை என்பதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தேன். வழக்கு நம்பர் ஆகும் முன் மறுபடியும் காக்கை உட்கார பனம் பழம் விழுந்த கதையாக கலெக்டர் விசாரணை தொடங்கியது.
நீதிமன்றம் அவமதிப்பு வழங்கும் வந்தது. அதில் கலெக்டர் விசாரணை முடிந்து விட்டது 10 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்குவதாக உத்திரவாதம் அளித்தார். இடையில் கோரோனா பிரச்சினை வர இரண்டு மாதங்கள் கழித்து கலெக்டரின் தீர்ப்பு வந்தது.
கலெக்டர் முஸ்லிம் பார்ட்டியின் வாதத்தை ஏற்கவில்லை. ஆனால் அதே சமயம் இந்த நிலம் 100 வருடங்கள் தாலுக் ஃபோர்ட் கீழ் இருந்ததால் அதை மறுபடியும் தாலுக் ஃபோர்ட் பெயருக்கே மாற்றுவதாக உத்திரவிட்டார். அதாவது கோவில் பெயருக்கு சுங்கவார் சத்திரம் பெயருகோ மாற்றவில்லை.
கோவில் குளம் குறித்து என்னுடைய மனு விசாரித்தாக குறிப்பிட்டுள்ளார். கோவில் மற்றும் அறநிலையத்துறை அங்கு குளம் உள்ளது என்று கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த பிரச்சினை குறித்து தன் முடிவு என்ன என்று கூறாமல் விட்டுவிட்டார்.
இந்த தீர்ப்பின் மூலமாக முஸ்லிம் பார்ட்டி தோற்கடிக்கப்பட்டனர். சேம்சைட் கோல் போட்டு காசு சம்பாதிக்க பார்த்த கும்பல் முகத்திலும் கரி. ஆனால் குளம் மீட்பதற்கு அதிகாரபூர்வமாக அரசு முடிவு வரவில்லை என்பதால் குளத்தை மீட்க அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் சுந்திரவரதராஜ பெருமாள் துணையுடன் இறங்கியுள்ளோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...