Thursday, June 11, 2020

சிந்தனைக்கு :

தி.நகர் பழக்கடை ஜெயராமனின் மகன் ஜெ. அன்பழகன் MLA வின் ஆயுள் கொரோனாவில் முடிந்தது.
ஆஸ்பத்திரி, அவர் உடலை மாநகராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர் MLAவாக இருந்தாலும், திமுகவில் செல்வாக்குள்ளவராகவும், ஸ்டாலின் வலதுகரம் போல் இருந்தாலும், அனாதை பிணம் போல் மாநகராட்சி அதிகாரிகள் அவரது உடலை ஆம்புலன்சில் இடுகாடுக்கு எடுத்துக் கொண்டுபோய் முப்பதே நிமிடங்களில் வேலையை முடித்து விட்டனர்.
உற்றார், உறவினர் மட்டுமின்றி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட கட்சி தலைவர்கள், தொண்டர்கள் யாரும் நெருங்க அனுமதிக்கப்படவில்லை. சாங்கியம் சம்பிரதாயம் எதுவும் நடத்தப் படவில்லை.
இதை ஏதோ குரோத மனப்பான்மையுடன் சத்தியமாக எழுதவில்லை.
கடந்த மார்ச் மாத கடைசியில் ஊரடங்கு உத்தரவுபோட்ட சில நாட்களில் நடிகர் விசு நோய்வாய்ப்பட்டு இறந்தார். ஊரடங்கானதால் திரைப்படத் துறையினரோ, நண்பர்களோ யாரும் வரவில்லை. நெருங்கிய உறவினர்கள் ஒரு ஐம்பது பேர், சாஸ்திர சம்பிரதாயங்களுடன் இறுதி கடன்களை செய்து முடித்தனர்.
அப்போது இதே ஜெ. அன்பழகன் "பார்ப்பன பாம்பு இறந்தது. இறுதி ஊர்வலத்தில் இருபது பேர்கூட கலந்து கொள்ளவில்லை" என்று ஏளனம் செய்தார்.
உறவே, இன்று அவர் நிலையை பார்த்தாயா? அதன் பெயர்தான் கர்மா.
அவர் ஆத்திகனோ, நாத்திகனோ, அவர் ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...