Thursday, June 11, 2020

" ஞானஸ்னானம் "

ஒரு ஹிந்து வாடிகன் சிட்டிக்கு போனாரு. அங்கே அவருக்கு ப்ரெய்ன் வாஷ் பண்ணி கிறிஸ்டியனா கன்வெர்ட் பண்ணிட்டாங்க. பண்ணும்போது கர்ததர் அற்புதங்கள் (miracles) செய்யக்கூடியவர்னு உபதேசிச்சாங்க. ஊருக்கு திரும்பினாரு. திரும்பும்போது ‘ஃபாரின் சரக்கு விஸ்கி’ ஒரு ஆறு க்வார்ட்டர் பேக் பண்ணி கொணாந்தூட்டார். இங்க வந்து எறங்கினதும் கஸ்டம்ஸ்காரங்க செக் பண்ணாங்க. பாட்டில்ங்க மாட்டிக்கிச்சு. இது என்னான்னு கேட்டாங்க. நான் போன எடத்துல எனக்கு
ஞானஸ்னானம் கொடுத்தாங்க. அப்போ ஆறு பாட்டில்ங்கள்ல ஹோலி வாடர் கொடுத்து, ஊருக்குப்போய் ஒங்க ரிலேஷன், ஃப்ரெண்ட்ஸ் க்கெல்லாம் கொடுக்கச்சொல்லி கொடுத்தாங்கன்னாரு. யோவ் என்னாய்யா உடான்ஸ் உடற. இது ஃபாரின் விஸ்கி ன்னாங்க கஸ்டம்ஸ்காரங்க. உடனே இவரு என்ன பண்ணார்னா ‘ கர்த்தாவே ! நீங்க மெய்யாலுமே மிரகிள்ஸ் செய்யக்கூடியவர்தான். அங்கே ஹோலி வாடரா இருந்ததை இங்கே வந்ததும் விஸ்கியா மாத்தீட்டீங்களே! உங்கள் நாமம் பரிசுத்தப்படுவதாக என்று சொல்லி சிலுவைக்குறி போட்டுக்கிட்டார். அசறலையே கஸ்டம்ஸ்காரங்க. டூட்டி வாங்கிக்கிட்டுதான் விட்டாங்க...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...