Friday, May 21, 2021

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு.

 தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தாலும், ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து கொண்டு இருக்கிறது. 


சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலத்தில் சூறைகாற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு


*  ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்,  திருவண்ணாமலை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது. 

*  உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், 

* 5 கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் எதிர்பார்க்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

* மேலும், அந்தமானை ஒட்டிய வங்க கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...