இனிய காலை வணக்கம் நண்பர்களே ...
1 #இந்தியாவில்முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )
2. இசைஞானி முதன் முதலாக '#ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.
3. 137 #வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"
4. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "#வைதேகிகாத்திருந்தால்", "#அரண்மனைக்கிளி".
5. இந்தியாவுக்கு #கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )
6. “#பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..
7. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் #Maestroஅதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( #சிறைச்சாலை )
8. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், #இந்தியசினிமாஇசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.
9. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.இன்னும் புதுமைகள் #தொடரும்....இசைஞானியின் கடைக்கோடி ரசிகன்.
No comments:
Post a Comment