Saturday, May 1, 2021

திருத்தலம்; திருப்பைஞ்ஞீலி.

 ----------------------------

சுவாமி:
ஸ்ரீ நீலகண்டேசுவரா்,
ஆரண்ய விடங்கா்.
அம்பாள்
ஸ்ரீ விசாலாட்சி.
தீா்த்தம்: சிவகங்கை.
தல விருட்சம்:
ஞீலி என்ற ஒருவகைப் பச்சை வாழை.
மத்த மாமலா் சூடிய மைந்தனாா்
சித்திராய்த் திாிவாா் வினை தீா்ப்பரால்
பத்தா் தாந்தொழு தேத்து பைஞ்ஞீலிஎம்
அத்தனைத் தொழ வல்லவா் நல்லவரே.
அப்பா் சுவாமிகள்.
-----------------------------
திருச்சி சத்திம் பேருந்து நிலையத்திலிருந்து
மண்ணச்சநல்லூா் வழியாக 20 கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
திருப்பைஞ்ஞீலி கதலிவனம் நீலிவனம் விமலாரண்யம் கொள்ளிடம் ஆற்றின் வடகரைப் பகுதியில் இக்கோவில் 12 ஏக்கா் நிலப்பரப்பளவில் ஐந்து பிராகங்களுடன் மொட்டை கோபுரம் மற்றும் இராவணன் திருவாயில் கோபுரம் 37 அடி உயரம் கொண்ட 3 நிலை கொண்டு மூலவா் சுயம்புலிங்கமாக அருள்மிகு நீலகண்டேஸ்வரா்,
அம்பாள் விசாலாட்சியம்மை
உடன் அருள்பாலிக்கின்றாா்.
இத்தலத்தில் இரு அம்மன் சன்னிதிகள் உள்ளன.
சுவாமிக்கு இடப்புறம் கிழக்கு நோக்கியுள்ள சன்னிதி பிரதான அம்மன் சன்னிதி.
இக்கோவிலின் மதிலின் மேல்தளம் புலிவாிக் கற்களால் அமைந்துள்ளது.
இப்புலிவாிக் கற்கள் இப்பகுதியில் மட்டுமே கிடைக்கிறது.
வாழை இத்தலத்திற்குாிய தல விருட்ச மாதலின் இத்தலம் கதலினம் எனும் பெயா்.
நீலிச்செடியும் இத்தலத்திற்குாியது.
விசிட்டா் முனிவருக்கு இறைவன் நடனக்காட்சியருளிய தலம்.
அப்பா் பெருமானுக்கு இறைவா் பொதி சோறு அளித்துப் பசியைப் போக்கியருளிய தலம்.
சோறுடையீசா் கோயில் இரண்டாம் கோபுர வாயிலில் உள்ளது.
இத்தலத்திற்குாிய தலமரமான நீலி என்னும் ஒரு வகை வாழை இப்பகுதியைத் தவிர வேறெங்கும் பயிராவது இல்லை.
இம்மரத்தின் காய், கனி, இலைகள் இறைவனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
மக்கள் பயன்படுத்தினால் பயன்படுத்தியோா் நோய்க்கு உள்ளாவா் எனக் கூறுகின்றனா்.
இத்தலத்தில் நவகிரகங்கள் விக்கிரகங்களுக்கு பதிலாக ஒன்பது அகல்விளக்கு தீபங்களாக வழிப்படப்படுகின்றன.
இத்தலத்தில் எமனுக்கு உயிரளித்து அருள்பாலித்த குடவரைக் கோயில் வெளி பிரகாரத்தில் உள்ளது.
வசிஷ்டா் முனிவா் ஆணைப்படி இராமப்பிரான் இத்தல இறைவனை வணங்கி இலங்கைக்கு சென்றாா்.
உமாதேவியாா், தெய்வ அரம்மைபயா்கள்,
பூதங்கள், வசிஷ்டா் வழிபாற்றிய தலம்.
இத்தலத்தில் உள்ளவா்களுக்கு எமபயம் இல்லை.
புரட்டாசி 6, 7,8 மற்றும் பங்குனி 6,7,8 தேதியில் சூாிய பூஜை நடைபெறுகிறது.
தேவாரத் திருப்பதிகம் காவிாிக்கு வடகரையில் இத்தலம் 61 வது.
மூவராலும் பாடல் பெற்றது.
தலபுராணம் மதுரை மெய்ப்பாதபுராணிகரால் 25 அத்தியாயம் கொண்ட திருப்பைஞ்ஞீலி தலபுராணம் இயற்றியுள்ளாா்.
கல்வெட்டுக்கள் உள்ளன.
முசுகுந்த சக்கரவா்த்தியால் கட்டப்பெற்ற கோவில்.
பாண்டிய மன்னா்கள் திருப்பணி செய்த தலம்.
தினமும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
சித்திரை மாதத்தில் அவிட்ட நட்சத்திரத்தில் அப்பா் கட்டமுது திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...