Thursday, November 4, 2021

கரும்பு டன்னுக்கு ரூ.4000 - நெல் குவிண்டால் ரூ.2500 : தி.மு.க., அறிவித்த தேர்தல் வாக்குறுதி நிறைவேறுமா ?

 கரும்புக்கு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் அறிவிக்கையில் கூறிய, தி.மு.க., ஆட்சியமைத்த பின் மவுனம் காக்கிறது. அரசு கொள்முதல் விலையை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய தலைவர் விருத்தகிரி கூறியதாவது:

கரும்பு டன், ரூ.4000 - நெல் குவிண்டால் ரூ.2500 : தி.மு.க.,  தேர்தல் வாக்குறுதி  ?


சர்க்கரை பருவம் என்பது, அக்., 1ல் துவங்கி, செப்., 30 வரையாகும். 2020-21ம் ஆண்டுக்கான சர்க்கரை பருவம் முடிந்து, 2021-22ம் ஆண்டு சர்க்கரை பருவம் துவங்கி உள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு, பொதுத்துறை மற்றும் தனியார் என, 44 சர்க்கரை ஆலைகள் இயங்கின. தற்போது, 10 ஆலைகள் மூடப்பட்டு, 34 மட்டுமே செயல்படுகிறது. காரணம், போதுமான கரும்பு உற்பத்தி இல்லாமல், சாகுபடி பரப்பளவு குறைந்தது, சர்க்கரை தொழில் லாபகரமாக இல்லாததே.கடந்த, 2020-21ம் பருவத்தில், விவசாயிகளுக்கு, மத்திய அரசு அறிவித்த விலையில் கூடுதலாக, மாநில அரசு வழங்குவதாகவும், சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதாகவும் அறிவித்தது.

மேலும், தமிழக அரசின் விவசாயத்துக்கான முதல் தனி நிதி நிலை அறிக்கையில், மத்திய அரசு வழங்கிய, 2,707.50 ரூபாயுடன், மாநில அரசு ஊக்கத்தொகையை சேர்த்து, 2,900 ரூபாய் டன் ஒன்றுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.ஆனால், மத்திய அரசு அறிவித்த விலையை மட்டுமே, மாநில அரசு வழங்கியது. ஆனால், தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு, 2,500 ரூபாய் வழங்கப்படும் என, குறிப்பிடப்பட்டிருந்தது.அதன்படி, தற்போது, அரவை பருவம் துவங்க உள்ள நிலையில், கரும்பு டன் ஒன்றுக்கு, 4,000 ரூபாய் அறிவித்து வழங்குமா என்பதே, விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தனியார் வியாபாரிகள், அரசு அறிவித்த விலைக்கு கொள்முதல் செய்வதில்லை. வெளிசந்தையிலும் மறுக்கப்படுகிறது. மாறாக, குறைத்து கொள்முதல் செய்கின்றனர். அவர்களுக்கு, தண்டனை வழங்குவதுடன், அரசு அறிவித்த விலைக்கு நெல் கொள்முதல் செய்யும் வகையில், அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தமிழகத்தில், தொடர் பருவமழை காரணமாக கரும்பு சாகுபடி மற்றும் நெல் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...