Sunday, November 7, 2021

அண்ணாத்தே அறிமுகம் .

 படம் முழுக்க ரஜினி பூதாகரமாய் வியாபித்திருக்கிறார்.

அவர் நடையின் வேகம், முகத்தின் பாவங்கள், பேச்சின் நக்கல், சண்டைக் காட்சிகளில் தீவிரம் எதுவுமே வயது மற்றும் உடல்நிலைப் பிரச்சினைகள் காரணமாக கொஞ்சமும் குறையவில்லை.
அவருடைய ஸ்க்ரீன் பிரசன்ஸ் அண்ணாமலை காலத்து ரஜினி போலவே இருப்பதால் அண்ணாமலை காலத்து கதையே அவருக்குப் போதும் என்று இயக்குனர் நினைத்துவிட்டார் போல.
முதல் பாதியில் பிரகாஷ்ராஜ் முதலில் எதிர்ப்பது, பிறகு திருந்துவது, குஷ்பு, மீனா வகையறாவின் கறுப்பு வெள்ளை காலத்து கலாட்டாக்கள், மாப்பிள்ளை தேடும் காட்சிகள், நயன்தாராவின் உடனடி அவசரக் காதல், கீர்த்தி சுரேஷ் மீது ரஜினியின் அன்லிமிட்டட் பாசம் என்று கலகலப்பாகவே போகிறது படம்.
அண்ணாத்தே அறிமுகப் பாடலும், சார சார காத்து பாடலும் படமாக்கப்பட்ட விதமும் மனதை அள்ளுகிறது.
திருமண வீட்டில் நடக்கும் டிவிஸ்ட் காட்சிகள் பத்தாயிரம் வாலா பட்டாசு! ரயிலில் ஓடிப்போகும் தங்கை தரும் அதிர்ச்சியை உள்வாங்கி அப்போதும் தங்கை மீது கோபப்படாமல் முடிவெடுக்கும் காட்சியில் முள்ளும் மலரும் ரஜினியின் கிளாசிக் நடிப்பு முத்திரையைப் பார்க்க முடிகிறது. நேர்த்தியான, உருக்கமான காட்சியமைப்பு.
தங்கை ஊருக்கு வந்தால் உடன் பயணிக்கும் பயணிகள் எல்லோருக்கும் கவனிப்பு போன்ற ஒரு சதவிகிதம் கூட எதார்த்தம் இல்லாத மிகை காட்சிகள் அதிகம்.
இரண்டாம் பாதியில் கல்கத்தாவில் தங்கையின் வாழ்க்கையைப் பாதித்த மகா பெரிய வில்லனை சொல்லி சொல்லி பழி வாங்குகிறார்.
அதை தங்கைக்கே தெரியாமல் ரகசியமாக செய்ய வேண்டியதற்கான காரணம் அழுத்தமாக இல்லாததால்.. கிளைமாக்ஸ் காட்சியில் தனக்கு உதவுவது யார் என்று கீர்த்தி சுரேஷ் அடிபட்ட ரவுடிகளிடம் கேட்கும்போது அது நகைச்சுவைக் காட்சியாகிவிடுகிறது.
மெயின் வில்லனுக்கு ஒரு கிளைக் கதை வைத்து அவனுடைய அண்ணனுடனும் ரஜினி மோதுவதெல்லாம்... தேவையில்லாத ஆணி!
அந்த வில்லனான ஜெகபதி பாபுவின் தோற்றம், எருமை மாடு பின்னணி எல்லாம் துருத்தி நிற்கிறது.
படம் முழுதும் எல்லோருக்கும் எது நியாயம், எது வாழ்க்கை என்று கருத்து சொல்லிகொண்டே இருப்பது திகட்டுகிறது.
டி.இமானின் பாடல்களும், பின்னணி இசையும் முக்கியமான பலமாக நிற்கிறது.
சீரியல் பார்த்துப் பழகிய பாசக்கார பெண்மணிகளுக்கு கண்டிப்பாக மிகை உணர்ச்சிகள் பிடிக்கும்.
ஆனால்..
ஜீன்ஸ் கூட்டம் வேறு மாதிரி சினிமாக்களைத்தான் ரசிக்கிறது என்பதை இயக்குனர் உணர வேண்டும்.
அள்ளிக் கொட்டியிருக்கும் பாசமும், அழகழகான பாடல்களும், ரஜினியின் வஞ்சனை இல்லாத உழைப்பும் வசூலில் பாதிப்பேற்படுத்தாது என்பதற்கு இன்று காலைக் காட்சியில் தொடர் மழைக்கு நடுவிலும் அரங்கு நிறைந்திருந்ததே சாட்சி.
May be an image of 1 person and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...