Monday, November 15, 2021

உஷ்ஷ்ஷ்: அமைச்சர் - செயலர் மோதல்.

 முதல்வரிடம் பஞ்சாயத்து!வீட்டு வசதித் துறைச் செயலராக இருக்கும் ஹிதேஷ்குமார் மக்வானாவுக்கும், துறையின் அமைச்சராக இருக்கும் முத்துசாமிக்கும், 'ஏழாம் பொருத்தமாக' இருப்பதாக, துறை முழுதும் பரவலான பேச்சு.மக்கள் நலனுக்காக எந்தத் திட்டத்தை நிறைவேற்றலாம் என சொன்னாலும், அதற்கெல்லாம் நிதி கிடையாது என்பது உள்ளிட்ட ஏதேதோ காரணங்களைச் சொல்லி, திட்டத்தை, துவக்கத்திலேயே கிடப்பில் போட வைத்து விடுகிறாராம் துறையின் செயலர்.துறை ரீதியிலான ஆய்வின் போதும், இது தொடர்பாக, அமைச்சருக்கும், செயலருக்கும் நேரடியாக வாக்குவாதம் நடப்பதாக, அதிகாரிகள் பதற்றமாக தெரிவிக்கின்றனர்.


இதற்குத் தான், 'அயல் பணியில் இருந்த உங்களை மெனக்கெட்டு, தமிழகத்துக்குக் கொண்டு வந்தாரா முதல்வர்...' என்றெல்லாம் கேட்டு விட்டாராம் அமைச்சர்.எதற்கும் அசைந்து கொடுக்காத துறைச் செயலர் மக்வானா, தன் நிலையில் இருந்து கொஞ்சமும் கீழே இறங்கி வர மறுத்து விட்டாராம்.இதையடுத்து, 'என்னுடைய அமைச்சர் பதவிகளில், எத்தனையோ செயலர்களை பார்த்திருக்கிறேன். உங்களைப் போன்ற ஒருவரை பார்த்ததே இல்லை' என சொன்ன அமைச்சர், 'முதல்வரிடம் பேசிக் கொள்கிறேன். அவர் உங்களை மாற்றினால் மட்டுமே, இந்தத் துறையில் எதையும் செய்ய முடியும்' என, சொல்லி விட்டு சென்றாராம்.அதன்பின், துறை ரீதியிலான ஆய்வுகளையும் தவிர்க்கிறாராம் அமைச்சர்.

இதற்கிடையில், முதல்வரிடம் வெளிப்படையாக எல்லாவற்றையும் சொல்லி விட்டாராம். கூடவே, 'அவரை அங்கிருந்து மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமித்தால் மட்டுமே, துறையில் வேகமாக செயல்பட முடியும்' எனவும் சொல்லி விட்டாராம்.'கொஞ்சம் பொறுமையா இருங்க; விரைவில் நல்லது நடக்கும்' என சொல்லி, அமைச்சர் முத்துசாமியை அனுப்பி வைத்தாராம் முதல்வர்.இதனால், துறை செயலருக்கு எந்த நேரமும் மாற்றல் உத்தரவு வரலாம் என அமைச்சர் தரப்பு எதிர்பார்த்து காத்திருக்கிறதாம்.


latest tamil news



திருவள்ளுவர் கிறிஸ்துவர்:பிரச்னையில் தங்கம் தென்னரசு?-



திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்' என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய புத்தகம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், 'திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர். அவர் கிறிஸ்துவராக இருந்து தான், திருக்குறள் எழுதியதாக நுாலாசிரியர் பெரியநாயகம் தன்னுடைய நுாலில் குறிப்பிட்டிருக்கிறார். அது ஆய்வுக்குரியது தான்' என பேசினார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

'திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு' என பா.ஜ.,வினர் குற்றம் சாட்டுகின்றனர். இதை, ஒரு சிலர் திட்டமிட்டு செய்வதற்கு காரணம், அமைச்சர் தங்கம் தென்னரசு என ஒரு தகவலும் பரவுகிறது. இதில் தங்கம் தென்னரசு எங்கேயிருந்து வருகிறார் என கேட்டால், 'கோவில்களில் தேவாரம், திருவாசகம் படிப்பது போல, திருக்குறளையும் படிக்கச் செய்ய ஏற்பாடு செய்யப்படும்' என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராகவும் இருக்கும் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்திருந்தார். இப்படி, ஹிந்து கோவில்களில் திருக்குறளை படிக்க வைத்து விட்டால், திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பிராமணராக்க முயல்வர். அதை அடிப்படையிலேயே தகர்க்க வேண்டும் என முடிவெடுத்துத் தான், பெரியநாயகத்தை வைத்து, திருவள்ளுவரை கிறிஸ்துவராக உருவகப்படுத்தும் போக்கு திடுமென துவங்கி இருக்கிறதாம்!


8 மாவட்ட தலைவர்கள் நியமனம்

சென்னை: கோஷ்டி பூசலுக்கு தடைநீண்ட இழுபறிக்கு பின், ஒரு வழியாக, தமிழக பா.ஜ.,வுக்கு, 8 புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில், தி.மு.க.,விலிருந்து, பா.ஜ.,வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணனுக்கு, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.கரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகியாக இருந்து, பா.ஜ.,வில் ஐக்கியமான செந்தில்நாதன், கரூர் மாவட்ட தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.

கோவை வடக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சங்கீதா, பா.ஜ.,வின் முதல் மாவட்ட பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.செங்கல்பட்டு மாவட்ட தலைவர் வேதா சுப்பிரமணியம் உட்பட மற்ற 5 மாவட்டத் தலைவர்களும் பா.ஜ., நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது.'மாஜி மாவட்டத் தலைவர்கள் அதிருப்தியடையாமல் இருக்க, அவர்களை புதிய மாவட்டத் தலைவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும்; அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருக்கிறார். கோஷ்டி பூசலை வளர விடாமல், துவக்கத்திலேயே கிள்ளி எறிவது நல்ல விஷயம் தான் என்கிறது, அக்கட்சி வட்டாரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...