யமதர்மராஜா முதலில் வாஜ்பாயை பார்த்து கேட்டார்....
யார் இது ? இவர் புண்ணிய பாவ கணக்கு என்ன ?
ஐயா இவர் பாரத பிரதமராக இருந்தார். இவர் வாழும் போதெல்லாம் தனக்காக வாழாமல் பிறருக்காக வாழ்ந்தவர். திருமணம் கூட செய்துக் கொள்ளாமல் தன்னை நாட்டுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர்.
அப்படியா.....சரி இவருக்கு சுவர்க போகத்தை கொடு
யமதர்மராஜரே என்றார் வாஜ்பாய்.
ம் சொல்லுங்கள் தர்ம சிரேஷ்டரே ?
ஐயா நான் செய்த புண்ணியத்தில் என்னை பிரதமராக தேர்ந்தெடுக்க வாக்களித்த மக்களுக்கும் பங்கு உண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த புண்ணியம் செய்யும் பேறு கிடைத்திருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் சுவர்க போகம் கிடைக்கட்டும்.
ததாஸ்து....அப்படியே ஆகட்டும் என்றார் யமதர்மராஜா.
அடுத்து வரவழைக்கப்பட்டார் கட்டுமரம்
என்ன பாவ, புண்ணியம் செய்துள்ளார் இவர் சித்திரகுப்தா ?
ஐயா இவன் செய்யாத பாவமே இல்லை. தன்னுடைய பதவிக்காகவும் சுகத்துக்காகவும், குடும்பத்திற்காகவும் இவன் அழித்த குடும்பம் ஒன்று இரண்டில்லை, கெடுத்த பெண்கள் பல, அத்தனை பாவங்களையும் இவன் செய்து விட்டான்.
அப்படியா.....சரி இவனுக்கு நரகத்தின் கொடூர தண்டனையை கொடு
யமதர்மராஜரே என்றார் கட்டுமரம்
சொல்லடா கொடுங்கோலா ?
ஐயா நான் செய்த பாவத்தில் என்னை முதல்வராக தேர்ந்தெடுத்த மக்களுக்கும் பங்கு உண்டு. அவர்கள் வாக்களிக்காவிட்டால் எனக்கெப்படி இந்த பாவம் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் ? ஆகவே அவர்களுக்கும் இந்த நரக வாசம் கிடைக்கட்டும்.
உண்மைதான்... அப்படியே நடக்கட்டும் என்றார் யம்தர்மராஜா.
நீதி - பாவம் செய்பவனை ஆதரிப்பவன் அந்த பாவத்தில் நிச்சயமாக பங்கு பெறுகிறான்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
No comments:
Post a Comment