Thursday, November 4, 2021

நேர்மை.....

 ஒரு கஞ்சப்பிசினாரி, காலமெல்லாம் சம்பாதித்த பணத்தை கருமித்தனமாக

செலவு செய்து சேமித்து வைத்திருந்தார். அவர் இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் தன் மனைவியை அழைத்து “நான் இறந்து விட்டாலும் என் பணத்தை என் கூடவே கொண்டு செல்லவிரும்புகிறேன்.
எனவே என் பணத்தை என்னுடன் சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்து விடு” என்று கடவுளின் பேரால் உறுதி மொழி வாங்கிக் கொண்டார்.
மனிதரின் கடைசி ஆசை என்று அவர் மனைவியும் கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்து விட்டார்.
அம்மனிதர் இறந்த பின் எல்லா ஏற்பாடுகளும் நடந்தது. சவப்பெட்டியை மூடும்போது, இறந்தவரின் நேர்மையான மனைவி, “கொஞ்சம் பொருங்கள்” என்று கூறி சவப்பெட்டியினுள் ஒரு பேழையையும் வைத்து மூடச்செய்தாள்.
இரண்டு நாளுக்கு பிறகு அவளுடைய தோழி அவளிடம் "ஆமாம், சவப்பெட்டிக்குள் நீ வைத்த பேழைக்குள் என்ன இருந்தது" என்று கேட்டாள். அதற்கு அவள் நடந்த விவரத்தை கூறினாள்.
தோழி “நீயும் முட்டாள்தனமாக அவர்சொன்னது போல் செய்து விட்டாயே ! இனி வருங்காலத்தில் வாழ்க்கையை எப்படி சமாளிக்க போகிறாய் ?" என்று கேட்டாள்.
அதற்கு அந்த நேர்மையான மனைவி, ”சவப்பெட்டியினுள் பணத்தை வைப்பதாக கடவுளின் பேரால் உறுதி மொழி கொடுத்த பிறகு, நான் எப்படி அதை மாற்ற முடியும்?
அதனால், நான்கு பெட்டி பணம் மொத்தத்தையும் ஒரு சவப்பெட்டிக்குள் வைக்க முடியாத காரணத்தினால், அனைத்து பணத்தையும் என் கணக்கில் பேங்கில் போட்டுவிட்டு, அந்த முழுத்தொகைக்கும் காசோலையாக வைத்துவிட்டேன்.
அவர் போன இடத்தில் முடிந்தால் மாற்றிக்கொள்ளட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை." என்றாள்.
இதைக்கேட்ட தோழிக்கு...........?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...