Monday, November 15, 2021

ஜாக்கிறதை மிக மிக அவசியம், எங்கும் பாதிக்கபடுவது பெண்.

 வாட்சப்பில் அந்த வாத்தியாருடன் chat செய்திருக்கிறாள்... வண்டியில் போய் இருக்கிறாள்... வண்டியில் அந்த ஆளுடன் வீட்டுக்கு வந்து இறங்கியிருக்கிறாள்... வேறு மாணவிகளுடனும் இதே போல பேசுகிறீர்களா என்று வாத்தியாரைக் கேட்டு இருக்கிறாள்... இவ்வளவு நடக்கும் போது பெற்றோர் என்ன செய்து கொண்டு இருந்தார்கள்? ஏன் மகளைக் கண்காணிக்கவில்லை? கண்டிக்கவில்லை? ஆசிரியர் என்பதால் எல்லை மீறி பழக அனுமதிக்கலாமா? எந்த வயது ஆண்களிடமும் பெண்கள் எட்டி நின்று பழகுவது தானே நம் பண்பாடு? இனியாவது உங்கள் மகள் என்ன செய்கிறாள்.. யாருடன் போகிறாள்.. வருகிறாள்... என்று கண்காணியுங்கள் பெற்றோர்களே... மொபைல் உபயோகிக்க அனுமதிக்காதீர்கள்... அவசியம் என்றால் உங்கள் கண்காணிப்பில் உபயோகிக்கட்டும்... ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க கற்றுக் கொடுங்கள்... எது சரி எது தவறு என்று எடுத்துக் கூறுங்கள்... பருவ வயதில் ஆண்கள் சிரித்து பேசினால் அது பெண்களைக் கவரும்... அது அந்த வயதுக்குரிய தாக்கம்... நம் மகளை நாம் தான் பாதுகாக்க வேண்டும்... சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து தான் பெரும்பாலான ஆண்கள் காத்திருப்பார்கள்...

உயிர் போன பிறகு அழுது புரண்டாலும் உங்கள் அருமை மகள் திரும்பி வர போவதில்லை...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...