ஜெய்பீம் என்ற அம்பேத்காரின் ஸ்லோகத்தை வைத்துக்கொண்டே ஒடுக்கப்பட்ட ST இனத்தை சார்ந்த ஒருவருக்கு சூரியா செய்துள்ள சமகால மோசடி:
25 வருடங்களுக்கு முன்னாடி கொடூர முறையில் போலீஸ் கஸ்டடியில் கொலை செய்யப்பட்ட நரிக்குறவ சமூகத்தை சேர்ந்த நபரின் உண்மை கதையை சார்ந்தது என்று சொல்லிவிட்டு...
அந்த நபருக்கு இப்போது இவர் செய்து இருக்கும் துரோகங்கள் மூலமாக..
இப்போது இவர்களின் நிலைமை மாறி இருக்கிறதா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது!!
முதலில் பாதிக்கப்பட்ட நபரின் உண்மை கதையை சார்ந்தது என்கிற பொழுது அவரிடம் அனுமதியை பெற்றிருக்கவேண்டும் ஆனால் இவர் ஒரே ஊரிலேயே இருக்கும் அந்த பாதிக்கப்பட்ட நபரை நேரில் சென்று கூட பார்க்கவில்லை!!?
அனுமதி பெறவில்லை!!??
அடுத்து படம் வெற்றி பெற்று 45 கோடி சம்பாதித்த பிறகு அதில் ஒரு பணம் கூட இவர்களுக்கு உதவி தொகை கொடுக்க வில்லை ...
மேலும் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தில் நாலே குடும்பங்கள் இருந்த ஒரு ஊரில் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று அங்கிருந்த வன்னியர் படையாட்சி சமூகத்தினர் ஒன்றுபட்டு உதவிசெய்து கிட்டத்தட்ட பத்தாண்டுகள் குடும்பத்தையே காப்பாற்றினார்கள் என்று சொல்லும் பார்வதி குடும்பத்தினரின் உண்மைக்கு புறம்பாக...
கொடுமைப்படுத்திய போலீஸ்காரரை வன்னியர் ஆக சித்தரித்து தலித் & வன்னியர் சண்டை மூட்டும் விதத்தில் படத்தை காட்டி இருப்பது ..
அடுத்தது இருளர் சமூகத்திற்கு, பத்து பங்குதாரர்கள் கொண்ட அகரம் என்ற நிறுவனம் வழியாக சூர்யா நன்கொடை கொடுப்பதாக சொல்லி...
இருளர்களை கிறிஸ்தவர்களாக மாற்றும் ஒரு மிஷனரி க்கு கொடுத்துள்ளதாக தகவல்கள் வருகிறது .
ஏனென்றால் இவர் நன்கொடை கொடுத்துள்ள நிறுவனம் பதிவு செய்யப்படாத நிறுவனம்.
அதுவும் முதல்வர் தலைமையில் எப்படி செய்கிறார்கள்?
முறையான ஆட்சி முறையான நீதி முறையான அலுவலர்கள் என்றெல்லாம் நேர்மறை.. முறை... என்பதைப் பற்றி விலாவரியாக படங்கள் எடுத்து பேசும் சூர்யா
பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்திற்கு பணம் கொடுத்ததன் நோக்கம் என்ன?
இன்னும் பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது..
மொத்தத்தில் படங்களை பார்த்து ..
அழுதும்
சிரித்தும்
குதூகலித்தும்.
ஹீரோக்கள் எல்லோரும் நல்லவர்கள் ..
என்று நினைத்து ஹீரோ வர்ஷிப் செய்யும் நாம்தாம் முட்டாள்கள்!!
உண்மை வேறு ஏதோவாக தான் இருக்கிறது!!
இன்னமும் சுரண்டும் வர்க்கம் சுரண்டி கொண்டுதானிருக்கிறது... வறியவர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!
No comments:
Post a Comment