Saturday, November 6, 2021

ஜெயலலிதா மகள்" ஊடக தர்மம் (!)

 வருடத்திற்கு ஒருவர் கிளம்பி வருகிறார். இதன் பின்னணி எல்லாம் என்னவென்று புரியவில்லை..

தன் சொந்த வாழ்க்கையை அரசியல் மேடைகளில் எதிரிகள் கடித்து குதறிய போது அதையெல்லாம் சளைக்காமல் எதிர் கொண்டவர் ஜெயலலிதா. வேறு ஒரு பெண்மணியாக இருந்தால் எப்போதோ ஓடிவிட்டிருப்பார்.
நடிகர் சோபன்பாபுவுடன் பழகியது உள்பட அவர் எதையுமே மறைக்கவில்லை. இங்கு பிரச்சினை அதுவல்ல..
இங்கே யார் வந்து," நான் ஜெயலலிதாவின் மகள்- மகன்" என்று கிளப்பி விட்டாலும் உடனே அவரைப் பேட்டி எடுத்து ஒளிபரப்புகிறார்கள்.. இதெல்லாம் என்ன என்றே தெரியவில்லை..
நான் ரஜினிகாந்தின் மகன்.. நான் கலைஞரின் மகன்.. அப்துல்கலாமின் மகள் என்று யாராவது வந்து புகாரோடு பேட்டி கொடுத்தால் இதே மீடியாக்கள் எதைப்பற்றியும் விசாரிக்காமல் அதையும் வாங்கி போடுவார்களா?
செய்தி சேனல்களில் எடிட்டோரியல் ஒன்று இருக்கும். அடிப்படை ஆதாரங்கள் இல்லாத விஷயங்களை இதெல்லாம் வேண்டாம் என்று ஆரம்பித்திலேயே தவிர்க்கும். அதற்கும் மேலே செய்தி ஆசிரியர் ஒருவர் இருப்பார்.. இப்போதெல்லாம் சில சேனல்களில் அப்படியொரு செட்டப் இருப்பதேயில்லைபோல..
விவகாரம் நீதிமன்றத்தில் வழக்காக பதிவாகி அறிவியல் ரீதியாக பூர்வாங்க ஆதாரம் இருக்கிறது என்று சொல்லப்படும்பட்சத்தில்கூட ஆரம்பக்கட்டத்தை மனதில் வைத்து மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டிய விவகாரங்கள் இது போன்றவை.
ஆனால் எதைப்பற்றியும் சிந்திக்காமல் இறந்துபோன ஒரு பெண் தலைவரின் ஆன்மாவை தொடர்ந்து காயப்படுத்தி கொண்டிருக்கிறது மீடியா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...