Saturday, November 6, 2021

உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதையின் பிறந்த தினம்!!

 அறிவியல் ஆய்வுக்காக அரசு வேலையை உதறியவர்..! சர்.சி.வி.ராமன் பிறந்ததினப் பகிர்வு


சந்திரசேகர வெங்கட ராமன் என்ற இயற்பெயர் கொண்ட சர்.சி.வி.ராமன், 1888-ம் ஆண்டு நவம்பர்7-ம் தேதி திருச்சியை அடுத்த திருவானைக்காவல் எனும் கிராமத்தில் பிறந்தார்.

இந்தியாவில்,  தமிழ்நாட்டிலே  உள்ள  திருச்சிராபள்ளிக்கு அருகில் அமைந்த திருவானைக்காவல்   எனும் ஊரில் பிறந்தார். இந்தியாவிலேயே முழுமையாகப் படித்த ஒரு அறிஞருக்கு 1930ல் நோபல் பரிசு கிடைத்தது முதல் முறையாகும்.


பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர் ஆவார். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு 

(Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இக்கண்டுபிடிப்பு இன்று பொருள்களின் பல விதமான பண்புகளைக் கண்டறிய (பொருளுக்கு கேடு ஏதும் நேராமலும்) மிகவும் பயனுடையதும் உலகில் புகழ் பெற்றதும் ஆகும்


சந்திரசேகர வெங்கட்ராமன் தந்தையார், இரா. சந்திரசேகர் ஐயர் ஒரு ஆசிரியர். தன் தந்தை விசாகப்பட்டினத்தில் இயற்பியல் விரிவுரையாளராகப் பணியாற்றியதால் வெங்கட்ராமன் அங்கேயே தன் பள்ளி படிப்பை முடித்தார். அவர் 1904 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் தன்னுடைய B A பட்டப்படிப்பை சிறப்பு தகுதியுடன் முடித்தார். வெங்கட்ராமன் தன் முதுகலை பட்டப்படிப்பை அதே கல்லூரியில் தொடர்ந்தார். 1907 ஆம் ஆண்டு ஜனவரியில் M A பட்டப்படிப்பு தேர்வில் எல்லாப் பாடங்களிலும் சாதனை மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். 1907ஆம் ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை தேர்வு எழுதி அதில் முதிலிடம் பெற்றார். 1907ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கொல்கத்தாவில் உள்ள கணக்குத் துறை தலைமை அலுவலராக தனது வாழ்க்கையைத் துவங்கினார்.


சி. வி. இராமன் அவர்கள் பட்டம் பெற்றதும், அறிவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் இல்லாததால், இந்திய அரசுப் பணவியல் துறையில் 1907ல் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார். என்றாலும் பணியின் கூடவே  கொல்கத்தாவில்  உள்ள மருத்துவர் மகேந்திரலால் சர்க்காரால் நிறுவப்பட்ட  இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் (Indian Association for the Cultivation of Science), ஒளிச்சிதறல் பற்றி செயல்வழி (செய்முறை) ஆய்வுகள் நடத்தி வந்தார். பின்னர் 1917ல் கொல்கத்தாப் பல்கலைக்கழகத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டிருந்த பாலித் பீட இயற்பியல் பேராசிரியராகச் சேர்ந்தார். கொல்கத்தாவிலே 15 ஆண்டுகள் கழித்த பிறகு, இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (Indian Institute of Science) 15 ஆண்டுகள் கழித்தார். அதன் பின் அவராகவே நிறுவிய இராமன் ஆய்வுக்கழகத்தில் (Raman Research Insitute) இயக்குநராக கடைசி நாட்கள் வரை பணியாற்றி வந்தார். இவர் நவம்பர் 21, 1970ல் இவ்வுலகில் இருந்து பிரிந்தார்.


அவருடைய கண்டுபிடிப்பு ‘ராமன் விளைவு' (Raman effect)என்றும் அழைக்கப்படத் தொடங்கியது.நோபல் பரிசு மட்டுமல்ல மாணவர்களே, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே, இவருக்கு லண்டனில்உள்ள ராயல் சொசைட்டியின் ‘ஃபெல்லோஷிப்’ (1924), பிரிட்டிஷ் அரசால் இவருக்கு நைட் ஹூட் பட்டம், சர் பட்டம் அளிக்கப்பட்டது (1929).


அதேபோல், இத்தாலி நாட்டின் உயர் பதக்கமான ‘மேட்யூச்சி’, மைசூர் அரசரால் ராஜ்சபாபூசன் பட்டம் (1935), பிலிடெல்பியா நிறுவனத்தின் பிராங்க்ளின் பதக்கம் (1941), இந்தியாவின் உயர் விருதான பாரத ரத்னா விருது ( 1954) அவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது. அகில உலக லெனின் பரிசு (1957) உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பதக்கங்களையும், விருதுகளை அவர் பெற்றுள்ளார்.


இந்தியாவில் இருந்து படித்தாலும் கூட ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளை உங்களுக்குள் விதைத்துக்கொண்டு இருந்தால் ஒருநாள் நிச்சயமாக நோபல் பரிசு வெல்லும் அளவிற்கு மிகப்பெரிய சாதனைகளை அறிவியல் துறையில் நிகழ்த்துவிட முடியும் என 100 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் நிரூபித்துக்காட்டிவிட்டார் என்றால் அவர் சர்  சிவி ராமன் தான். பெற்றோர்களுக்கு அவர் சொல்லிக்கொள்ளும் ஒரே ஒரு அறிவுரை – பிள்ளைகள் எதாவது கேள்விகளை கேட்டால் அதை தவிர்த்துவிடாமல் அதற்கு பதில் கூறுங்கள் என்பதுதான். 


*ராமன் விளைவு'க்காக நோபல் பரிசும் பெற்றார். நோபல் பரிசுக் குறிப்பில் இருக்கும் முதல் தமிழ்ப் பெயருக்குச் சொந்தக்காரரான சர் சி.வி.ராமனின் பிறந்த தினம் இன்று.💐💐💐

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...