Friday, November 5, 2021

திராவிடம் ஒரு கார்பரேட் கம்பெனி ஒரு சிறு பார்வை.

 அஸ்வினி என்கிற

நரி குறவர்
இனத்தை சேர்ந்த
ஒரு பெண்மணிக்கு,
திடீரென்று ஒரு நாள்
கோயில் சமபந்தியில் அநீதி இழைக்கப்படுகிறது...!
அவர் மீடியாவில் தோன்றி
பொங்குகிறார்..!
உடனே தனது மகளுக்கு
பட்டியல் இனத்தை சேர்ந்த மணமகனை காவல்துறை உதவியுடன் துரத்திய
சேகர் பாபுவுடன்
அவருக்கு உணவு உண்ண
ஏற்பாடு செய்யப்பட்டு
அவருக்கு மகிழ்வை
ஏற்படுத்துகிறார்கள்.
உடனே அஸ்வினி அத்தனை
உரிமைகளையும் அடைந்த
மகிழ்ச்சியில் மீடியாவில்
பேட்டி கொடுக்கிறார்..!
இதற்கு இடையில்
நீட் எதிர்ப்பு போராளி
சூர்யா கடந்த ஆட்சியில்
ஏகப்பட்ட பொங்கல் வைத்தவர்
திமுக ஆட்சியில்
தொடர்ந்து அமைதியாக இருக்கிறார் .
ஜெய் பீம் என்கிற படத்தை தயாரிக்கிறார்..!
( தம்பி கொம்பன் வர்மன்
என்று ஆதிக்க சாதி பெருமை
பேசும் படங்களில் நடிப்பது வேறு கதை.)
திராவிட முதல்வரை பார்க்கிறார்..
ஒரு கோடி இருளர் இன மக்களுக்கு கொடுக்கிறார்..
திராவிட முதல்வர் ஜெய் பீம்க்கு
விளம்பரம் செய்கிறார்.
திரைப்படத்தில் போராடியது
காம்ரேட்ஸ்...
நடந்தது திராவிட ஆட்சி..
அரஜகம் செய்தது திராவிட
அரசின் காவல்துறை.
இது எதுவும் பேச்சு பொருளாக
அமையவில்லை..
நன்றாக கவனியுங்கள் வெறும்
சாதிய அடக்கு முறை என்றளவில் நுனிப்புல்
சித்தாந்தமாக கட்டமைக்கபடுகிறது...!
அதை திராவிட ஒட்டுண்ணி
இண்டலக்சுவல் உணவு விரும்பிகள் விவாத பொருளாக்குகிறார்கள்..!
அதே வேளையில்
பங்குனி செல்வன் வகையாறக்கள் அஸ்வினியை
விவாதத்திற்கு அழைத்து
முன்னிறுத்துகிறார்கள்...!
சமூக நீதியை இவ்வாறாக திராவிட நாடக கம்பனி காத்து வரும் நிலையில்..!
திராவிட முதல்வர் இருளர் சமூகத்திற்கு பட்டா கொடுக்கிறார். இவ்வளவுக்கு
அவர் தந்தை போட்ட சமத்துவபுரம் நாடகம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை..!
அதே அஸ்வினி வீட்டிற்கு செல்கிறார்..
ஊடகங்கள் ஜெய் பீம் இல்
இருந்து அப்படியே இந்த செய்தியை முன்னிறுத்துகிறது..!
திராவிட முதல்வரின் புத்திரர்
பெரும் பொருட்செலவில்
அண்ணாத்தே படத்தை தமிழகத்தின் ஒட்டுமொத்த திரையரங்குகளிலும் திரையிடுகிறார்.. வேறு யாருக்கும் அரங்கு கொடுக்காமல் 100% இருக்கைகளுடன்.
இந்த பாசிச செயலை
சமூக விடுதலை வாய் வியாபாரிகளான
சுப.வி.மதிமறன் ,ஆழி செந்தில் நாதன்..
சைக்காலஜி சாலினி..!
சு.வள்ளி...!
இன்னும் 32 கூட்டமைப்பு
ஒட்டு திண்ணைகள் யாரும் தட்டி கேட்க்க வில்லை..!
வாயில் திராவிட அல்வா மென்று கொண்டு இருந்தார்கள்.
ஜெய்பீம் பின்னுக்கு தள்ளப்பட்டது.
இவ்வாறாக இந்த திட்டமிட்ட
பெரும் அரசியல் சமூக நீதி
அடிப்படையற்ற புழுதி கிளப்பும் நாடகம்...
அஸ்வினி என்கிற அந்த பெண்
ராம் நாயக்கால் தான் நாங்கள்
வாழ்கிறோம் என்று சொல்ல
வைத்து ..50 வருட தோற்று போன திராவிட டூபாக்கூர் தனத்தை முட்டு கொடுத்து
நிறைவு செய்வார்கள்.
அதாவது திரைப்பட வசனகர்த்தாக்களால் உருவாக்கப்பட்ட திராவிட கம்பெனி இன்று வரை அதே
வேலையை பிராண்டிங்காக
செய்து மிளகாய் அரைத்து வருகிறார்கள்..!
இவர்கள் எதற்கும்
இதுவரை தீர்வு கண்டதே இல்லையா..?
இதில் படு அயோக்கியர்கள் என்பவர்கள் யார்..?
இந்த நாடகம் முழுதும் தெரிந்தும்,
மக்களுக்கு எடுத்து சொல்லவேண்டிய கற்றவர்களுக்கான
அறத்தை தவற விட்டு..
மிக அமைதியாக
திராவிடத்திற்கு
முட்டுகொடுத்து கடந்து போகும்
சோகால்டு இலக்கிய வாதிகள்
நடு நிலை முகமூடிகள் தான்.
இது தமிழர்களின் காலம்
இனி திராவிட நாடக அரங்கேற்றம்
எடுபட
வாய்ப்பே இல்லை ராஜா.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...