Thursday, November 4, 2021

கொள்ளைக்காரன் என ஸ்டாலினால் விமர்சனம் செய்யப் பட்ட செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தவுடன் புனிதராகி விட்டாரே அது போலவா...???

 சிவசேனா காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவாரின் ரூ 1,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமானவரித் துறை.

அனில் தேஷ்முக் கைது செய்யப்பட்ட பரபரப்பு ஓய்வதற்குள் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதுள்ளது.
மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் சேர்ந்து மகாவிகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றனர். முதல்வர் உத்தவ் தாக்கரே அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர் அனில் தேஷ்முக். என்சிபி கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான தேஷ்முக் மீது மும்பை போலீஸ் ஆணையர் பரம்பிர் சிங் குற்றம்சாட்டி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார்.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை கடந்த ஏப்ரல் மாதம் ராஜினாமா செய்தார். அனில் தேஷ்முக் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவரது வீடுகளில் ரெய்டு நடத்தியது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவில் அனில் தேஷ்முக்கை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியதுள்ளது.
(அஜித்பவர் தேசியவாத காங்கிரசின் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகன்)
கடந்த மாதம் அஜித் பவாருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அஜித் பவாருக்கு சொந்தமான சத்தாரா கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது என்ற புகார் எழுந்தது.
இதையடுத்து சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களை முதலில் அமலாக்கத்துறை முடக்கியது. இதையடுத்து சர்க்கரை ஆலை மற்றும் அஜித் பவாரின் பினாமி நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டின் கீழ் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனைகளின் போது சட்டவிரோதமான ரூ1,000 கோடி சொத்துகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். இந்த சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...