Sunday, December 5, 2021

ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் ஏராளமானோர் அஞ்சலி.

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தைஒட்டி, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, அ.ம.மு.க., தலைவர் தினகரன், சசிகலா உள்ளிட்டோர், அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

 ஜெயலலிதா 5ம் ஆண்டு நினைவு தினம்: மெரினாவில் ஏராளமானோர் அஞ்சலி

ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், ஜெயலலிதா நினைவிடம் சென்றனர். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.பொதுமக்களும் திரளாக வந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.பல பெண்கள் அவரை நினைத்து கண்ணீர் விட்டனர்.
அதேபோல மாநிலம் முழுதும், கட்சியினர் ஆங்காங்கே ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அ.ம.மு.க.,வினர் அக்கட்சியின் பொதுச் செயலர் தினகரன் தலைமையில், ஜெயலலிதா நினைவிடம் சென்று, மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார். சசிகலாவும் தன் ஆதரவாளர்களுடன் சென்று மரியாதை செலுத்தினார்.


கோஷத்தால் பரபரப்பு


அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து புறப்பட்ட போது, அங்கிருந்த அ.ம.மு.க., தொண்டர்கள்சிலர், சசிகலா மற்றும் தினகரனை வாழ்த்தி கோஷமிட்டபடி, பழனிசாமியின் கார் அருகே செல்ல முயன்றனர்.இதனால், அப்பகுதியில்பரபரப்பு ஏற்பட்டது. கோஷமிட்டவர்கள் கார் அருகில் வராத வகையில், அ.தி.மு.க., தொண்டர்கள் அரணாக நின்று, பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் கார்கள் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.


இனி எங்கெங்கும் வெற்றி தான்!அ.தி.மு.க.,வினர் உறுதிமொழி ஏற்பு

ஜெயலலிதா நினைவிடத்தில், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில், கட்சியினர் உறுதிமொழி ஏற்றனர். அதன் விபரம்:
* ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க, ஓய்வின்றி உழைக்க உறுதி ஏற்கிறோம். பொய்யான வாக்குறுதி பல தந்து, தமிழர்களை ஏமாற்றி, நாடாளுவோரின் குடும்ப ஆட்சிக்கு முடிவெழுத உறுதி ஏற்கிறோம்
* ஏழைகள் பசியாற அம்மா உணவகங்கள்; எளியோர் நலம் பெற அம்மா மருந்தகங்கள் துவக்கப்பட்டன. அவற்றின் பெயர்களை மாற்ற நினைக்கின்றனர். திட்டத்தை நிறுத்தி விட்டால், அவர்களின் கொட்டத்தை அடக்கிடுவோம்
* பொய் வழக்குகள் பல போட்டு, நம்மை முடக்கிவிட நினைப்போரின் ஆணவத்தை அடக்கிடுவோம்
* தெருவெங்கும் தண்ணீர். தமிழர்களின் விழிகளிலே கண்ணீர். தீயசக்தி ஆட்சியிலே தண்ணீரும் வடியவில்லை; தமிழர் வாழ்வும் விடியவில்லை. இந்த அவல நிலையை மாற்றுவோம்; ஆட்சியை மாற்றுவோம்
* ஊரக உள்ளாட்சி தேர்தலில் சதிகள் செய்து, அதிகார பலத்தால் வெற்றி பெற்றார்கள். விரைவில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நமக்கு உத்வேகம் தருகிறது; உற்சாகம் தருகிறது. இனி, பிரித்தாளும் சூழ்ச்சிகள் செய்து, எதிரிகள் வெற்றி பெற முடியாது. வெற்றி பெற விடமாட்டோம். இனிமேல் எப்போதும் வெற்றி தான்; எங்கெங்கும் வெற்றி தான்.இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...