Thursday, December 16, 2021

வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் அவமானத்தில் சிக்கி தவிக்கிறீர்களா? பெருமாளை இப்படி தரிசனம் செய்யுங்கள். கழுத்தை நெறிக்கும் கடன் பிரச்சினை கரையும்.

 வாங்கிய கடனை எப்படியாவது திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு கைநீட்டி கடனை வாங்கி விடுகின்றோம். வீடு கட்ட, திருமணம் செய்ய, மருத்துவச் செலவுக்காக, இப்படி கட்டாய தேவைகளுக்காக கடன் வாங்கி விட்டு, அந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் ஒரு பக்கம் இருக்க, அனாவசியமாக ஆடம்பரத்துக்காக கடன் வாங்கி செலவு செய்பவர்களும் ஒருபக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் இருக்கும் போது நல்ல வருமானம் இருக்கும். நல்ல வருமானம் இருக்கும் போது கடன் தொகையை கட்டுவதில் எந்த கஷ்டமும் இருக்காது. அதுவே ஒருவருக்கு கெட்ட நேரம் வரும் போது நிச்சயமாக கடன் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத அவல நிலைக்கு தள்ளப்படுகிறோம். அந்த சமயத்தில் ஆன்மீக ரீதியாக சில வழிபாட்டு முறைகளை பின்பற்றும் போது நம்முடைய கெட்ட நேரத்தில் வரக்கூடிய கஷ்டத்தை எதிர் கொள்ளும் மனப்பக்குவமும் சக்தியையும் நமக்கு அந்த ஆண்டவன் கொடுத்து விடுவான். இதற்காக செய்யப்படுவது தான் பரிகாரம். சரிங்க, ஏதோ ஒரு சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி சிக்கி உள்ளவர்கள் இப்போது அந்த கடனை கட்ட முடியாத சூழ்நிலை. உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான ஒரு வழி இதோ. திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சென்றால் உங்கள் கடன் பிரச்சினைக்கு தீர்வு குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருப்பதி பெருமாள் கோவிலுக்கு செல்வதிலும் ஒரு சூட்சமம் உள்ளது.மாதம்தோறும் வரக்கூடிய பவுர்ணமி தினத்தன்று திருப்பதியில்  பெருமாளை தரிசனம் செய்ய செல்லவேண்டும். திருப்பதியின் மலை அடிவாரத்தில் இருக்கக்கூடிய ஆழ்வார் தீர்த்தத்தில் முதலில் குளித்துவிட்டு, அதன் பின்பு அருகில் இருக்கும் சிவபெருமானின் தரிசனை செய்துவிட்டு, கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு பாத யாத்திரையாக சென்று பௌர்ணமி நாளில் திரு மலையிலேயே தங்கி பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். பெருமானிடம் மனதார உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இப்படியாக 9 வாரம் பௌர்ணமி தினங்களில் திருப்பதிக்கு பௌர்ணமி நாளில் சென்று வந்தால் நிச்சயமாக உங்களுக்கு இருக்கக்கூடிய எவ்வளவு பெரிய கடன் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.  இன்னும் சிறப்பாக திங்கட்கிழமை அன்று பௌர்ணமி வந்தால் அந்த நாளை தவறவிடக்கூடாது. திங்கட்கிழமை வரக்கூடிய பவுர்ணமி தினத்தில் பெருமாள் வழிபாடு கடனை விரைவில் குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து 9 மாதம் பவுர்ணமி தினத்தில் திருப்பதிக்கு செல்ல முடிந்தால் பெருமாளை தரிசனம் செய்து வரவும். சூழ்நிலை காரணமாக இடையே ஏதாவது தடங்கல் வந்தாலும் பரவாயில்லை. அந்த மாதத்தை தவிர்த்துவிட்டு அடுத்தடுத்து வரக்கூடிய மாதங்களில் 9 மாதங்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு பெருமாளை மேல் சொன்ன முறைப்படி வழிபாடு செய்பவர்களுக்கு நிச்சயம் கடன்தொல்லையில் இருந்து விமோசனம் கிடைக்கும். மேல் சொன்ன வழிமுறைப்படி பின்பற்றி பெருமாளை தரிசனம் செய்கிறீர்கள். உங்களுடைய கடன் படிப்படியாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. இறுதியாக என்ன செய்ய வேண்டும். பெருமாளுக்கு காணிக்கையாக உங்களால் முடிந்த தொகையை கொடுக்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? உங்கள் கடனை அடைப்பதற்காக அவர் உதவி செய்தார் அல்லவா? அவர் குபேரருக்கு கட்டிவரும் கடனுக்காக நம்முடைய திருப்திக்காக நாமும் ஒரு காணிக்கையை செலுத்துகின்றோம். ஒருகைப்பிடி சில்லரை காசை பெருமாளுக்கு மனதார காணிக்கையாக செலுத்தினாலும் போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேற் சொன்ன வழிபாட்டு முறையை பின்பற்றி பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...