Tuesday, December 21, 2021

உலகத்தில் மனிதன்.

 "மாதுளை விலை எவ்வளவுங்க"

அந்த பெண் கேட்டாள்.
"ஒரு மாதுளை பத்து ரூபாய்ம்மா?"
என்றார் அக்கிழவர்.
"சரி, ஐந்து மாதுளை ₹45/- க்கு கொடுப்பீங்களா?" என கேட்டாள்.
"சரிம்மா, நீ கேட்ட விலைக்கே வாங்கிக்க. காலையிலிருந்து நீதான் போணி செய்கிறே.
கடவுள் உன்ன நல்லா வைக்கட்டும்," என்றார் அம் மாதுளை கடைக்கார கிழவர்.
தான் கேட்ட விலைக்கு கிடைத்துவிட்டது என்ற சந்தோஷத்துடன் அப்பெண் மாதுளை வாங்கிக் கொண்டாள்.
பிறகு தன் அழகான காரில் தன் தோழியை அழைத்துக் கொண்டு ஒரு ஹோட்டலுக்கு சென்றாள்.அவர்கள் இருவரும் ஹோட்டலில் அமர்ந்து பேசிக் கொண்டே தாங்கள் விரும்பியது வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டது குறைவு, மீதம் விட்டது அதிகம்ا
பில் தொகை ₹1200/-, அவள் ₹1300/- ஐ ஹோட்டல் நிர்வாகியிடம் கொடுத்து மீதி சில்லறையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்," என்றாள்.
ஹோட்டல் உரிமையாளருக்கு இது மிகச் சாதாரணம் விஷயம். ஆனால் மாதுளை விற்ற கிழவருக்கு வலி மிகுந்த விஷயம்ر
நாம் உதவி தேவைப்படும் ஏழைகளிடத்தில் ஏதேனும் வாங்கும்போது நம் பலத்தை காட்டுகிறோம். பணக்காரர்களிடமும், தேவைகளே இல்லாதவர்களிடமும் நாம் நம் தாராள குணத்தை காட்டுகிறோம் ! 🌝 🚶‍♂
May be an image of 3 people, fruit and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...